அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், ஸ்ரீஜா ரவி, கமலேஷ் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வந்தது. சீன் ரோல்டன் படத்திற்கு இசையமைத்திருந்தார். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.
ரூ.7 முதல் ரூ.8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் எத்தனை கோடி வசூல் குவித்திருக்கிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டூரிஸ்ட் பேமிலி படம் உலகளவில் ரூ.75 கோடி வசூல் குவித்து சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. சசிகுமார் மற்றும் சிம்ரனுக்கு இந்தப் படம் சிறந்த படமாக அமைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.