பட வாய்ப்பு இல்லனா என்ன? நாங்க அதுல சம்பாதிப்போம்.! கோடிகளை குவிக்கும் நடிகைகள்

Published : May 23, 2025, 05:27 PM IST

திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால் நடிகைகள் காஜல் அகர்வால் மற்றும் ஹன்சிகா மோத்வானி போன்றவர்கள் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
15
இன்ஸ்டாகிராம் மூலம் வருமானம் ஈட்டும் நடிகைகள்

படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்தவுடன், நடிகைகள் தங்களுக்கு வருமானத்தை ஈட்டவும், தொழில் வாழ்க்கையைத் தொடரவும் மாற்று வழிகளை கண்டுபிடித்து வருகின்றனர். காஜல் அகர்வால் மற்றும் ஹன்சிகா மோத்வானி போன்ற நடிகைகள் தங்களது திறமைகளையும், பிரபலத்தையும் பயன்படுத்தி பல்வேறு வணிக முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி இவர்கள் வருமானத்தை ஈட்ட தொடங்கியுள்ளனர்.

25
காஜல் அகர்வால் மற்றும் ஹன்சிகா மோத்வானி

பெரிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் செய்ய விருப்பம் கொள்கின்றன. இந்த விளம்பரங்களில் நடிக்கும் நடிகைகள் அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, அதன் மூலம் கணிசமான தொகையை சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகைகள் காஜல் அகர்வால் விளம்பர பதிவுகளுக்கு ஒரு போஸ்டுக்கு ரூ.10 முதல் ரூ.20 லட்சமும், நடிகை ஹன்சிகா ஒரு போஸ்ட்டுக்கு ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரையும் சம்பாதித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

35
கத்ரினா கைஃப் மற்றும் அனுஷ்கா சர்மா

பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் Lenskart மற்றும் ரீபோக் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு பதிவுக்கு ரூ.97 லட்சம் வரை வருமானம் பெறுகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 80 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின் தொடர்கின்றனர். கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் 70 மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்பவர்களை வைத்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர பதிவுக்கு ரூ.1 கோடி வருமானம் பெறுகிறார்.

45
ஆலியா பட் மற்றும் ஷ்ர்த்தா கபூர்

நடிகை ஆலியா பட் இன்ஸ்டாகிராமில் 85 மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்பவர்களை வைத்திருக்கிறார். இவர் மேபிளின் மற்றும் மேக் மை டிரிப் நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக பணியாற்றி வருகிறார். ஒரு விளம்பர பதிவுக்கு ரூ.85 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் பெறுகிறார். நடிகை ஷ்ர்த்தா கபூர் இன்ஸ்டாகிராமில் 90 மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்பவர்களை வைத்திருக்கிறார். இவர் AJIO, MyGlamm போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக இருக்கிறார். ஒரு விளம்பர பதிவுக்கு ரூ.15 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார்.

55
தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா

தீபிகா படுகோன் 80 மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களை வைத்திருக்கிறார். இவர் Adidas, Levi's போன்ற மிகப்பெரிய நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக இருக்கிறார். ஒரு பதிவுக்கு ரூ.2 கோடி வரை வருமானம் பெறுகிறார். பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் 90 மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்பவர்களை வைத்திருக்கிறார். இவர் Tiffany & Co, Ralph Lauren போன்ற நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக இருக்கிறார். இவர் பதிவிடும் ஒரு விளம்பர பதிவிற்கு சுமார் ரூ.3 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories