வரவேற்பை பெறும் டூரிஸ்ட் பேமிலி
டூரிஸ்ட் பேமிலி படம் ரிலீஸ் ஆகும் முன்னரே அதன் ஸ்பெஷல் ஷோ பார்த்த திரைப்பிரபலங்கள் இப்படத்தை ஆஹா, ஓஹோ என பாராட்டி இருந்தனர். இதனால் இப்படத்திற்கு ஓவர் ஹைப்பும் உருவானது. இதற்கு முன்னர் இதுபோன்று பாராட்டப்பட்ட படங்களெல்லாம் ரசிகர்கள் மத்தியில் மொக்கை வாங்கி இருக்கின்றன. ஆனால் டூரிஸ்ட் பேமிலி படம் கொடுத்த ஹைப்புக்கு ஒர்த் ஆன படமாக அமைந்துள்ளது. ரசிகர்களும் இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.