சிவகார்த்திகேயனை நெருங்க முடியாத சூர்யா; ரெட்ரோ முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?

Published : May 02, 2025, 07:33 AM IST

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவு வசூலித்துள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
சிவகார்த்திகேயனை நெருங்க முடியாத சூர்யா; ரெட்ரோ முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?

Retro Day 1 Box Office Collection : சூர்யாவின் 44-வது திரைப்படமான ரெட்ரோ மே 1ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். இதில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், சிங்கம் புலி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்தை 2டி நிறுவனம் சார்பாக சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்து இருந்தனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.

24
சூர்யா

ரெட்ரோ ரெஸ்பான்ஸ் எப்படி?

கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர் சூர்யா நடிப்பில் வெளியாகும் படம் இது என்பதால், இப்படம் அவருக்கு கம்பேக் படமாக அமையுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மே 1ந் தேதி ரிலீஸ் ஆன ரெட்ரோ திரைப்படம், விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை தான் பெற்று உள்ளது. படத்தின் முதல் பாதி சூப்பராகவும் இரண்டாம் பாதி சுமாராகவும் இருப்பதாகவும் படம் பார்த்த நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

34
ரெட்ரோ சூர்யா

ரெட்ரோ வசூல் நிலவரம்

கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவு வசூலித்து உள்ளது என்பதை தற்போது பார்க்கலாம். அதன்படி இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.11.6 கோடி வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. கங்குவா படத்தைக் காட்டிலும் இது அதிகம் தான். கங்குவா திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூ.11.3 கோடி வசூலித்து இருந்தது. அது வார நாட்களில் ரிலீஸ் ஆகியே இந்த அளவு வசூலித்து இருந்தது. ஆனால் ரெட்ரோ விடுமுறை நாளில் ரிலீஸ் ஆகியும் அதற்கு கிட்டத்தட்ட அதே அளவு வசூல் தான் கிடைத்துள்ளது.

44
ரெட்ரோ வசூல்

அமரன் சாதனையை நெருங்க முடியாத ரெட்ரோ

அதேபோல் பாக்ஸ் ஆபிஸில் சிவகார்த்திகேயனின் அமரன் பட சாதனையை ரெட்ரோ படத்தால் முறியடிக்க முடியவில்லை. அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளே ரூ.15 கோடி வரை வசூலித்து இருந்தது. ஆனால் ரெட்ரோ திரைப்படம் அதைவிட 3.4 கோடி கம்மியாகவே வசூலித்து உள்ளது. நேற்று வெளியான படங்களில் ஹிட் 3 படத்தைக் காட்டிலும் ரெட்ரோ தான் அதிகமாக வசூலித்து உள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.20 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories