Dushara_Vijayan
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான்
விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில்
வெளியானது. படம் வெளியான முதல் நாளில் இருந்து இன்று வரை நாளுக்கு நாள் பாராட்டுக்கள் அதிகரித்து வருகிறது.
Dushara_Vijayan
‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் குறிப்பிட்டு கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயன் அதிகம் கவனம் ஈர்த்துள்ளார். இந்த படத்தில் திமுகவைப் பற்றி பல்வேறு முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருந்தது.
Dushara_Vijayan
திமுக ஆட்சி காலத்தில் வடசென்னையில் பாக்ஸர்களை யானை மேல் வைத்து ஊர்வலம் நடத்தும் அளவிற்கு பாக்ஸிங்
கலாச்சாரத்தை ஆதரித்ததை பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். பல்வேறு காட்சிகளில் திமுக
கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தியுள்ளார். எமர்ஜென்சி காலக்கட்டத்தை கண்முன் காட்டியுள்ளதாக திமுக உடன்
பிறப்புக்கள் கொண்டாடி வருகின்றனர்.
Dushara_Vijayan
இந்நிலையில் துஷாராவின் தந்தை விஜயன் திமுகவில் முக்கிய பிரமுகர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்
சாணர்பட்டி அருகே கன்னியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த துஷ்ரா விஜயன் தந்தை விஜயன், திமுக தலைமை செயற்குழு
உறுப்பினர் மற்றும் சாணர்ப்பட்டி தெற்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும் உள்ளாராம்.
Dushara_Vijayan
எனவே திண்டுக்கல்லில் பல பகுதிகளிலும் துஷாரா விஜயனுக்கு திமுக உடன் பிறப்புக்கள் போஸ்டர் அடித்து ஒட்டி வாழ்த்து
தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி சோசியல் மீடியாவிலும் திமுக பிரமுகரின் மகள் நடிப்பில் பின்னி பெடலெடுத்துவிட்டார் என
வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.