Saroja Devi Eye Donation : மறைந்த நடிகை சரோஜா தேவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் இனி 2 குழந்தைகளின் மூலமாக அவர் மீண்டும் இந்த உலகை பார்க்க இருக்கிறார்.
2 குழந்தைகளின் மூலம் இனி உலகை பார்க்கும் சரோஜா தேவி
Saroja Devi Eye Donation : கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 1938ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி பிறந்தநார். இவருடைய அப்பா ஒரு போலீஸ் அதிகாரி. மகளின் மீது பற்று கொண்ட இவருடைய அப்பா சரோஜா தேவியை டான்ஸ் பள்ளியில் சேர்த்துவிட்டார். டான்ஸில் ஆர்வம் கொண்ட சரோஜா தேவியும் டான்ஸ் கற்றுக் கொண்டார்.
27
சரோஜா தேவியின் அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்
இது அவரது சினிமா வாழ்க்கைக்கு ரொம்பவே யூஸ் ஆக இருந்தது. ஆனால், இவருடைய அம்மா ரொம்பவே கண்டிஷன். நீச்சல் உடை, ஸ்லீவ்லெஸ் டிரஸ், அரைகுறை ஆடையெல்லாம் அணியக் கூடாது என்றெல்லாம் கண்டிஷன் போடுவாராம். அதுதான் அவரை சினிமாவில் நீண்ட காலம் நீடிக்க உதவியது.
37
சரோஜா தேவி சினிமா வாழ்க்கை
ஒரு நிகழ்ச்சியில் சரோஜா தேவி பாடிக் கொண்டிருந்த போது அவரது திறமையை கண்டு வியந்தவர் ஹொன்னப்ப பாகவதர். கேஆர் சீதாராம சாஸ்திரியின் கன்னட படமான மகாகவி காளிதாசா படம் தான் சரோஜா தேவியின் முதல் படம். இந்தப் படம் தான் அவரது முதல் வெற்றி. இந்தப் படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. இந்தப் படத்தில் சரோஜா தேவி வித்யாதரே என்ற ரோலில் நடித்தார். தொடர்ந்து பி ஆர் பந்துலுவின் தமிழ் படமான தங்கமலை ரகசியம் படத்தில் நடித்தார். இதில், அவர் ஒரு நடனக் காட்சியை நிகழ்த்தினார்.
47
கண்ணை மூடி தூங்க சென்ற சரோஜா தேவி
1950 ஆம் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்த நடிகைகளில் சரோஜா தேவியும் ஒருவராக இருந்தார். அனைத்து மொழிகளிலும் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என்று மாஸ் ஹீரோக்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவ்வளவு ஏன், விஜய் நடித்த படத்தில் கூட சரோஜா தேவி நடித்திருக்கிறார்.
57
சரோஜா தேவி விருதுகள்
பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் கலைமாமணி ஆகிய விருதுகள் வென்றுள்ளார். இந்த நிலையில் தான் கடந்த 1954 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான சரோஜா தேவி கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் சினிமாவில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். இந்த நிலையில் தான் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நேற்று வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
67
சரோஜா தேவி மறைவு
சரோஜா தேவியின் மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். மேலும், அவரது உடல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது சொந்த கிராமத்தில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
77
சரோஜா தேவி கண் தானம்
சினிமாவில் கொடி கட்டி பறந்த சரோஜா தேவி தனது மறைவிற்கு பிறகும் இந்த உலகை பார்க்க விரும்பியுள்ளார். இதன் காரணமாக தனது இரு கண்களையும் தானமாக கொடுக்க விரும்பினார். அதன்படி பெங்களூருவில் உள்ள நாராயணா நேத்ரா மருத்துவமனைக்கு சரோஜா தேவியின் கண்கள் தானமாக கொடுக்கப்பட்டது. சரோஜா தேவியின் கண்கள் இரு குழந்தைகளுக்கு இன்று பொருத்தப்பட இருக்கிறது. அந்த இரு குழந்தைகளின் மூலமாக இன்று நிரந்தரமாக தூங்க சென்ற சரோஜா தேவி இனி தினந்தோறும் இந்த உலகை பார்க்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.