Saroja Devi Last Rites :நடிகை சரோஜா தேவி, கடந்த 1938 ஆம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்தார். 17 வயதிலேயே திரைப்படத் துறையில் அறிமுகமான இவர், தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக மாறினார். 1955 ஆம் ஆண்டு மகாகவி காளிதாசா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த சரோஜா தேவிக்கு அபிநய சரஸ்வதி என்ற பட்டமும் உண்டு. இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதும், 1969 இல் பத்மஸ்ரீ விருதும், 1992 இல் பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது.
25
சரோஜா தேவியின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை சரோஜா தேவி நேற்று காலமானார். அவருக்கு வயது 87. சரோஜா தேவியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது வீட்டின் முன் காவல்துறையினர் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சரோஜா தேவியின் மரணம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரின் மறைவு திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.
35
அபிநய சரஸ்வதி சரோஜா தேவி உடல் சொந்த கிராமத்தில் நல்லடக்கம்
இந்த நிலையில்தான் பெங்களூருவில் உள்ள சரோஜா தேவி இல்லத்திற்கு சென்ற கர்நாடகா முதல்வர் சித்தராமையா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்போது பேசிய அவர், சரோஜா தேவியின் ஆன்மா சாத்தியடையவும், அவரது இழப்பை தாங்கும் வலியை அவரது குடும்பத்தினருக்கு இறைவன் கொடுக்க வேண்டும் என்றும் தான் பிரார்த்திப்பதாக கூறினார். அதோடு சரோஜா தேவியின் இறுதி சடங்கானது அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
45
கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி உடல் நல்லடக்கம்
சரோஜா தேவி சினிமாவிற்காக தன்னை அர்ப்பணித்தார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகாலம் சினிமாவில் பணியாற்றியிருக்கிறார். அபிநய சரஸ்வதி என்ற பட்டம் பெற்ற நடிகை. எல்லா மொழியிலும் அவர் நடித்துள்ளார். பலமுறை அவரை சந்தித்ததை குறிப்பிட்ட அவர், கர்நாடகா திரைப்பட வளர்ச்சிக்கு அவர் முக்கிய பங்காற்றினார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், திலீப் குமார், என் டி ராமாராவ் உள்ளிட்ட பிரபலங்களுடன் அவர் இணைந்து நடித்து அவரது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தார் என்று அவர் குறிப்பிட்டார்.
55
சரோஜா தேவியின் உடல் நல்லடக்கம்
இந்த நிலையில் தான் கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறியதைப் போன்று சரோஜா தேவியின் உடல் சிறப்பு வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அவரது சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது தாயார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் சரோஜா தேவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.