என்னை அறியாமலே ரஜினி ஸ்டைல் நடிப்பு எனக்குள் வந்துவிடுகிறது - லெஜண்ட் சரவணன் பேச்சு

Published : Jul 24, 2022, 09:45 AM IST

Legend saravanan : சரவணன் நடித்துள்ள லெஜண்ட் திரைப்படம் வருகிற ஜூலை 28-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அதற்கான ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் துபாயில் நடைபெற்றது.

PREV
15
என்னை அறியாமலே ரஜினி ஸ்டைல் நடிப்பு எனக்குள் வந்துவிடுகிறது - லெஜண்ட் சரவணன் பேச்சு

தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தற்போது, சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி உள்ளார். அதன்படி தமிழில் இவர் நடித்துள்ள முதல் படம் லெஜண்ட். இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார்.

25

இதுதவிர இப்படத்தில் ராய் லட்சுமி, ரோபோ ஷங்கர், பிரபு, விவேக், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மிகப்பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை லெஜண்ட் சரவணன் தான் தயாரித்து உள்ளார்.

35

லெஜண்ட் திரைப்படம் வருகிற ஜூலை 28-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்துக்கான ரிலீஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி சமீபத்தில் துபாயில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்.... நெக்ஸ்ட் சூர்யாவா? சிம்புவா?... தேசிய விருது வென்ற குஷியில் அடுத்த பட அப்டேட்டை வெளியிட்ட சுதா கொங்கரா

45

அதில் கலந்துகொண்ட லெஜண்ட் சரவணன், பத்திரிகையாளர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன்படி உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த லெஜண்ட் சரவணன், ரஜினி, விஜய் தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும், குறிப்பாக சிறுவயதில் இருந்தே ரஜினியின் படங்களையும், அவரது ஸ்டைலையும் பார்த்து ரசித்தவன் நான்.

55

அவரைப் போல் ஸ்டைல் வந்துவிடக் கூடாது என நான் தவிர்க்க பார்ப்பேன், ஆனால் அதையும் மீறி ரஜினி ஸ்டைல் நடிப்பு எனக்குள் வந்துவிடுகிறது. அதேபோல் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே தனக்கு ஆசை இருந்ததாக தெரிவித்த சரவணன், அதற்கான சூழல் தற்போது அமைந்ததால் தான் நடிக்க வந்ததாக கூறினார்.

இதையும் படியுங்கள்.... சூர்யாவுக்கு தேசிய விருது கிடைச்சது இப்படித்தானா..! புது குண்டை தூக்கிப் போட்ட ப்ளூ சட்டை மாறன்

click me!

Recommended Stories