சூர்யாவுக்கு தேசிய விருது கிடைச்சது இப்படித்தானா..! புது குண்டை தூக்கிப் போட்ட ப்ளூ சட்டை மாறன்

Published : Jul 24, 2022, 07:57 AM IST

Blue Sattai maran : தேசிய விருது வென்ற சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் அதுகுறித்து பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

PREV
15
சூர்யாவுக்கு தேசிய விருது கிடைச்சது இப்படித்தானா..! புது குண்டை தூக்கிப் போட்ட ப்ளூ சட்டை மாறன்

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி இருந்தார். 1 ரூபாய்க்கு விமான டிக்கெட்டை அறிமுகப்படுத்தி அசர வைத்த ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.

25

இதில் சூர்யா மாறா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க, கருணாஸ், காளி வெங்கட், ஊர்வசி, கேகே, விவேக் பிரசன்னா என ஏராளமானோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

35

ரிலீசான போது பெரிய அளவில் கொண்டாடப்பட்ட இப்படம் தற்போது 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளியும், சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷும், சிறந்த திரைக்கதைக்காக சுதா கொங்கராவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர சிறந்த படத்துக்கான விருதையும் சூரரைப் போற்று தட்டித்தூக்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... அட யோகி பாபுவின் மகனா இது? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே.. வைரலாகும் கியூட் புகைப்படங்கள்..!

45

தேசிய விருது வென்ற சூர்யாவுக்கும், சூரரைப் போற்று படக்குழுவுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்ததன் பின்னணியில் அரசியல் இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, தேசிய திரைப்பட விருது குழுவில் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை என்பவர் இடம்பெற்று இருந்ததாகவும். அவரால் தான் சூர்யாவுக்கு விருது கிடைத்தது என்பது போலும் பிஸ்மி என்பவர் பதிவிட்ட பதிவை குறிப்பிட்டு “மிஸ்டர் சூர்யா... உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

55

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ப்ளூ சட்டை மாறனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். அந்த தங்கதுரை என்பவர் சூர்யா மட்டுமல்ல தமன்னா, இயக்குனர் ஷங்கர் போன்றவர்களுக்கும் தான் மேனேஜராக இருக்கிறார். அப்படி பார்த்தால் அவர்களுக்கும் தேசிய விருது கிடைச்சிருக்கனும்ல என பதிலடி கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள்.

இதையும் படியுங்கள்... எதற்கும் துணிந்தவள் ரேகா நாயர்! சித்ராவின் காண்டம் மேட்டரை இழுத்து.. படு மோசமாக டேமேஜ் செய்த பயில்வான்!

Read more Photos on
click me!

Recommended Stories