புகழ்பெற்ற தொழிலதிபரான சரவணன் அருள் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தன் கடை விளம்பரங்களில் நடித்து வந்தார். அவர் விளம்பரங்களில் தமன்னா, ஹன்சிகா, ஸ்ரேயா போன்ற முன்னணி நடிகைகளுடன் ஆட்டம் போடுவதை பார்த்து முன்னணி நடிகர்களே ஆடிப்போயினர். தன் விளம்பரங்களுக்கு கிடைத்த வரவேற்பால் சினிமாவில் ஹீரோவாக எண்ட்ரி கொடுக்க முடிவெடுத்த சரவணன், தானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில் தானே ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அறிவித்தார்.
அப்படி அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் தான் தி லெஜண்ட். இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கினர். தனது முதல் படத்தையே பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என முடிவெடுத்த சரவணன், தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீஷியன்களை இப்படத்தில் பணியாற்ற வைத்தார். இதில் சரவணன் உடன் விவேக், மயில்சாமி, யோகிபாபு, பிரபு, விஜயகுமார் என ஏராளமான அனுபவம் வாய்ந்த நடிகர்கள் நடித்திருந்தனர்.
அதுமட்டுமின்றி இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்திருந்தார். நடிகை ராய் லட்சுமி இப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் சாங் ஆடி இருந்தார். இப்படம் கடந்தாண்டு ஜூலை மாதம் ரிலீஸ் ஆனது. விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு திரையிடப்படுவது போல் இப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சியெல்லாம் திரையிடப்பட்டது. ஒரு பக்கம் இப்படத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தாலும், படத்தை பார்த்த ரசிகர்கள் பிரம்மாண்டமாக இருப்பதாக பாராட்டினர்.
இதையும் படியுங்கள்... ‘நான் பார்த்த முதல் முகம் நீ’ அன்னையர் தினத்தில் அம்மா மீது அன்பை பொழிந்த சினிமா பிரபலங்கள்
தி லெஜண்ட் திரைப்படம் அண்மையில் ஓடிடியிலும் வெளியிடப்பட்டது. ஓடிடியிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதனிடையே தி லெஜண்ட் படத்தின் மூலம் அண்ணாச்சிக்கு எவ்வளவு லாபம் கிடைத்தது என்கிற தகவல் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதன்படி தி லெஜண்ட் படத்தின் தியேட்டர் மற்றும் ஓடிடி உள்பட மொத்த உரிமைகளை விற்றதன் மூலம் சரவணனுக்கு ரூ.60 கோடிக்கு மேல் லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அஜித், விஜய் படங்களுக்கு நிகராக தி லெஜண்ட் படத்திற்கும் வரவேற்பு கிடைத்துள்ளதால் அண்ணாச்சி செம்ம ஹாப்பியாக உள்ளாராம். விரைவில் அவர் நடிக்க உள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது. அடுத்ததாக அவர் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றன. சமீபத்தில் அவர் தனது புதிய படத்திற்காக தாடி, மீசை உடன் ஸ்டைலிஷ் லுக்கிற்கு மாறிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கேரளா ஸ்டோரியும், ஃபர்ஹானாவும் ஒன்னா.? இஸ்லாமியர்கள் அறிவில் குறைந்தவர்கள் இல்லை - இயக்குனர் அமீர்