தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித், தனுஷ், ரஜினிகாந்த், அல்லு அர்ஜுன், ராம்சரண், பிரபாஸ் ஆகியோர் வசித்து வரும் ஆடம்பர வீட்டின் மதிப்பு என்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
விஜய்
நடிகர் விஜய்க்கு நீலாங்கரையில் வீடு உள்ளது. கடற்கரை ஓரம் அமைந்துள்ள இந்த ஆடம்பர பங்களாவை ரூ.35 கோடி செலவில் கட்டி உள்ளார் விஜய். இந்த வீட்டில் தான் தற்போது தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். நடிகர் விஜய்க்கு சொந்தமான மற்றொரு வீடு சாலிகிராமத்தில் உள்ளது. அங்கு விஜய்யின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.
அஜித்
நடிகர் அஜித்துக்கு சொந்தமான வீடு சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ளது. அந்த வீட்டின் மதிப்பு ரூ.15 கோடி இருக்குமாம். அங்கு தன் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார் அஜித்.
தனுஷ்
நடிகர் தனுஷ் தான் விலையுயர்ந்த பங்களாவை கட்டி உள்ளார். இவர் அண்மையில் போயஸ் கார்டனில் கட்டியுள்ள ஆடம்பர பங்களாவின் மதிப்பு ரூ.150 கோடியாம். 4 அடுக்கு கொண்ட இந்த வீட்டில் சகல வசதியும் உள்ளதாம். மனைவி ஐஸ்வர்யா பிரிந்து சென்றுவிட்டதால் தற்போது தனது பெற்றோருடன் மட்டும் அந்த வீட்டில் வசித்து வருகிறார் தனுஷ்.
சூர்யா
நடிகர் சூர்யாவுக்கு சென்னையில் சொந்தமாக வீடு இருந்தாலும், அவர் குழந்தைகளின் படிப்புக்காக அண்மையில் மும்பையில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். அதன்படி மும்பையில் அவர் வாங்கி உள்ள வீட்டின் மதிப்பு ரூ.70 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. 9 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள அந்த ஆடம்பர பங்களாவில் தனது மனைவி ஜோதிகா, மற்றும் மகன் தேவ், மகள் தியா ஆகியோருடன் வசித்து வருகிறார் சூர்யா.
பிரபாஸ்
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் பான் இந்தியா நடிகராக உருவெடுத்தவர் பிரபாஸ். இவர் நடிப்பில் தற்போது ஆதிபுருஷ் திரைப்படம் தயாராகி வருகிறது. நடிகர் பிரபாஸுக்கு ஐதராபாத்தில் ரூ.60 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களா ஒன்று உள்ளது. அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார் பிரபாஸ்.
அல்லு அர்ஜுன்
புஷ்பா படம் மூலம் இந்திய அளவில் பேமஸ் ஆன நடிகராக மாறிவிட்டார் அல்லு அர்ஜுன். இவருக்கு ஐதராபாத்தில் உள்ள ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் சொகுசு பங்களா உள்ளது. அதன் மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அங்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் அல்லு.