திக் திக் காட்சிகளுடன் வெளியான.. கிரைம் திரில்லர் 'போர் தொழில்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்!

First Published | Jun 10, 2023, 9:48 AM IST

நடிகர் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகியுள்ள  க்ரைம் த்ரில்லர் படமான  "போர் தோழில்" படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
 

இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், உலகம் முழுவதும் நேற்று வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வரும் திரைப்படம் 'போர் தொழில்'. தன்னுடைய முதல் தமிழ் படத்திலேயே தரமான திரில்லர் கதையை இயக்கி ஒட்டு மொத்த திரையுலகினரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.

அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரின் கதாபாத்திரங்களுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை நிகிலா விமல் நடித்துள்ளார். உலகம் முழுவதும் நேற்று வெளியான 'போர் தொழில்' திரைப்படம், தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் யுகங்களின் அடிப்படையில் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து ஏமாற்றி கொண்டே இருக்கும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்! ஒரு வருடம் ஆகிடுச்சு? கடுப்பான ரசிகர்கள்!

Tap to resize

அதன் படி, இப்படம் தமிழகத்தில் மட்டும், சுமார் 50 லட்சம் வரை வசூலித்துள்ளதாகவும், உலக அளவில் 2 முதல் 3 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்து வருவதால், திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரம், இன்றும் - நாளையும் விடுமுறை நாள் என்பதால், முதல் நாளை விட வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "போர் தொழில்" திரைப்படத்தை  அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோஸ் ஆகியவை இணைத்து தயாரிக்கப்படுகிறது, தயாரிப்பாளர்கள் சமீர் நாயர், தீபக் சேகல், முகேஷ் ஆர். மேத்தா, சி.வி. சாரதி, பூனம் மெஹ்ரா மற்றும் சந்தீப் மெஹ்ரா ஆவர். 

சிம்பிள் மொமெண்ட்டை ஸ்பெஷல்லாக்கிய நண்பர்கள்! விக்கி கையை பிடித்து கொண்டு கண்ணீர் விட்ட நயன்தாரா! வீடியோ..

Latest Videos

click me!