ரெட்ரோ பட ‘கன்னிமா’ பாடல்; டி.ஆரின் இந்த எவர்கிரீன் ஹிட் பாடலில் இருந்து உருவானதாம்!

Published : Apr 22, 2025, 02:19 PM ISTUpdated : Apr 22, 2025, 02:20 PM IST

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற ‘கன்னிமா’ பாடல் உருவான விதம் பற்றி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறி இருக்கிறார்.

PREV
15
ரெட்ரோ பட ‘கன்னிமா’ பாடல்; டி.ஆரின் இந்த எவர்கிரீன் ஹிட் பாடலில் இருந்து உருவானதாம்!

Retro Movie Kanimaa Song Secret : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதன்முறையாக நடித்துள்ள படம் ரெட்ரோ. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படத்தை 2 டி நிறுவனம் சார்பாக சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படம் வருகிற மே 1ந் தேதி திரைக்கு வர உள்ளது.

25
Retro film

 

கம்பேக் கொடுப்பாரா Suriya?

ரெட்ரோ திரைப்படம் நடிகர் சூர்யாவிற்கு கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், அப்படத்தின் தோல்வியில் இருந்து ரெட்ரோ படம் மூலம் சூர்யா மீள்வார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இது காதலும், மோதலும் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் படமாகும். இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அதன் புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... மாப்பிள்ளை மோடில் சூர்யா - பூஜா ஹெக்டேவுடன் குத்தாட்டத்தில் தெறிக்கவிடும் 'கனிமா' பாடல் வெளியானது!

35
Actor Suriya

பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான Retro பட பாடல்கள்

ரெட்ரோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஹைப் ஏறி உள்ளதற்கு அப்படத்தின் பாடல்களும் முக்கிய காரணம். சந்தோஷ் நாராயணன் இசையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அந்த இரண்டு பாடல்களுமே வேறலெவல் வரவேற்பை பெற்றுள்ளன. அதிலும் கன்னிமா பாடல் தற்போது டிரெண்டிங் பாடலாக மாறி உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸை திறந்தாலே கன்னிமா பாடல் தான் இருக்கும். அந்த அளவுக்கு அப்பாடல் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகிவிட்டது.

45
Retro movie Song

டி.ஆர் பாட்டை தழுவி உருவான Kanimaa பாடல்

இந்த கன்னிமா பாடம் உருவானதன் பின்னணியை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறி உள்ளார். ரெட்ரோ படத்தின் கதைக்களம் 90ஸ் காலகட்டத்தில் நடப்பது போல் உள்ளதால், அந்த காலகட்டத்தில் உள்ள இசையை பெரும்பாலும் படத்தில் பயன்படுத்தி உள்ளதாக கூறி உள்ள சந்தோஷ் நாராயணன், குறிப்பாக கன்னிமா பாடலை, அந்த காலகட்டத்தில் வைப் செய்யப்பட்ட டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கி உள்ளதாக கூறி இருக்கிறார். 

55
T Rajendar

Kanimaa பாடல் ரகசியம்

1986-ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம் மைதிலி என்னை காதலி. இப்படத்திற்கு டி.ஆர்.தான் இசையமைத்து இருந்தார். அவரின் இசையில் அப்படத்தில் அறிமுக பாடலாக இடம்பெற்ற ‘என் ஆசை மைதிலியே’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. அந்த எவர்கிரீன் ஹிட் பாடலை தழுவி தான் கன்னிமா பாடலை உருவாக்கினாராம் சந்தோஷ். இதைப்பார்த்த ரசிகர்கள் டிஆர் பாடல் கொடுக்கும் அதே வைபை கன்னிமா பாடல் கொடுப்பதாக கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 4 மாதத்தில் 4 பிரம்மாண்ட படங்களுடன் பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் கோலிவுட்!

Read more Photos on
click me!

Recommended Stories