Kollywood-ன் 200 கோடி வசூல் படங்கள்
சினிடிராக் தகவலின்படி, ரஜினிகாந்தின் 7 படங்கள் உலகளவில் 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன. அதேபோல் தமிழ் சினிமாவில் அதிக 200 கோடி வசூல் படங்களை கொடுத்தவர் தளபதி விஜய் தான். அவரின் 8 படங்கள் இந்த சாதனையைப் படைத்துள்ளன. ரஜினியின் எந்திரன், கபாலி, 2.0, பேட்ட, தர்பார், ஜெயிலர், வேட்டையன் ஆகிய படங்களும், விஜய்யின் மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, லியோ, கோட் ஆகிய படங்களும் 200 கோடி கிளப்பில் உள்ளன.