Vishnu Vishal Becomes Father Again : வெண்ணிலா கபடி குழு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவா, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அவர், கடைசியாக லால் சலாம் படத்தில் நடித்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய அப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி அட்டர் பிளாப் ஆனது. அப்படத்தின் தோல்விக்கு பின்னர் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார் விஷ்ணு விஷால்.
24
Vishnu Vishal
விஷ்ணு விஷாலின் Irandu Vaanam
அவர் நடிப்பில் தற்போது இரண்டு வானம் திரைப்படம் உருவாகி உள்ளது. அப்படத்தை ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ளார். அப்படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். அப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதுதவிர கட்டா குஸ்தி படத்தின் 2ம் பாகத்திலும் நடிக்க தயாராகி வருகிறார் விஷ்ணு விஷால். மேலும் மோகன் தாஸ் என்கிற படமும் அவர் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2010-ம் ஆண்டே திருமணம் செய்துகொண்டார். அவரது முதல் மனைவியின் பெயர் ரஜினி. இந்த ஜோடிக்கு ஆர்யன் என்கிற மகனும் உள்ளார். சுமார் 8 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தது. ரஜினியுடனான பிரிவுக்கு பின்னர், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா மீது காதலில் விழுந்த விஷ்ணு விஷால், அவரை கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
44
Vishnu Vishal son and Daughter
மீண்டும் அப்பா ஆனார் Vishnu Vishal
ஜுவாலா கட்டாவை கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 22ந் தேதி கரம்பிடித்த விஷ்ணு விஷால், தன்னுடைய நான்காவது திருமண நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், ஒரு குட் நியூஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதன்படி விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டாவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமண நாளன்று தங்களுக்கு மகளே பரிசாக கிடைத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால். மேலும் தன்னுடைய மகன் ஆர்யன் அண்ணனாகிவிட்டதாகவும் குறிப்பிட்டு குழந்தையின் கையை பிடித்தவாரு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால். முதல் குழந்தை பெற்றெடுத்துள்ள விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.