Trisha Movie Remade in 9 languages : திரைப்படங்கள் ஒரு மொழியில் ஹிட்டானால், அதை பிற மொழியில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். ரீமேக் படங்கள் மூலம் நட்சத்திரங்களாக மாறிய ஹீரோக்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை திரிஷா நடிப்பில் வெளியான ஒரு படம் ஒன்பது முறை ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தை பிரபுதேவா தான் இயக்கி இருந்தார். தெலுங்கில் உருவான அப்படம் பின்னாளில் தமிழ், கன்னடம், இந்தி, ஒடியா, பஞ்சாபி, வங்காள மொழி என பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
27
Nuvvostanante Nenoddantana
பிரபுதேவா இயக்கிய படத்துக்கு இவ்வளவு மவுசா?
அந்த படத்தின் பெயர் `நுவ்வோஸ்தானந்தே நேனோடந்தானா`. கடந்த 2005-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சித்தார்த் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க, நடிகர் பிரகாஷ் ராஜும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். இதுதவிர இப்படத்தின் இயக்குனர் பிரபு தேவாவும் ஒரு கெஸ்ட் ரோலில் தோன்றினார். இப்படத்தை கடந்த 1989-ம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் இந்தியில் வெளியான ‘மைனே பியார் கியா' என்கிற பாலிவுட் படத்தை தழுவி எடுத்திருந்தார் பிரபுதேவா.
37
Unakkum Enakkum
தமிழ் ரீமேக்கில் நடித்த ஜெயம் ரவி
2005-ம் ஆண்டு வெளியாகி நுவ்வோஸ்தானந்தே நேனோடந்தானா திரைப்படம் ஹிட்டானதை அடுத்து 2006 ஆம் ஆண்டில் அப்படத்தை கன்னடத்தில் ‘நீனெல்லோ நானல்லே’ என்றும் தமிழில் உனக்கும் எனக்கும் என்கிற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டன. கன்னடப் படத்தை தினேஷ் லால் இயக்கினார்ர், அதே நேரத்தில் தமிழில் இப்படத்தை மோகன்ராஜா இயக்கினார். இதில் ஜெயம் ரவி ஹீரோவாகவும், திரிஷா ஹீரோயினாகவும் நடித்தனர். இந்த இரண்டு படங்களுமே 2006-ம் ஆண்டு ஜூலை 28ந் தேதி ரிலீஸ் ஆகி ஹிட்டாகின.
பின்னர் 2007-ம் ஆண்டு இந்த படம் இரண்டு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. அதன்படி பெங்காலி மொழியில் 'ஐ லவ் யூ' என்கிற பெயரிலும், மணிப்பூரி மொழியில் ‘நிங்கோல் தஜாபா’ என்ற தலைப்பிலும் வெளியிடப்பட்டன. இந்த இரண்டுமே வெற்றிப் படங்களாக அமைந்ததாக கூறப்படுகிறது.
57
Nuvvostanante Nenoddantana Remake in Punjabi
ஒடியா, பஞ்சாபியிலும் மாபெரும் வெற்றி
2009 ஆம் ஆண்டு, ஒடியாவில் ‘சுனா சாலி மோ ருபா சாலி’ என்ற தலைப்பிலும், பஞ்சாபியில் `தேரா மேரா கி ரிஷ்தா' என்ற தலைப்பிலும் `நுவ்வோஸ்தானந்தே நேனோடந்தானா` திரைப்படம் ரீமேக் செய்து வெளியிடப்பட்டன. இவை இரண்டுமே பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றன.
67
Nuvvostanante Nenoddantana Remake in Bangladesh
சர்வதேச அளவில் ரீமேக் செய்யப்பட்ட படம்
2010 ஆம் ஆண்டில், வங்காளதேசத்தில் ‘நிசாஷ் அமர் துமி’ என்கிற பெயரிலும், நேபாளத்தில் ‘தி ஃப்ளாஷ் பேக்: ஃபர்கேரா ஹெர்டா’ என்ற தலைப்பிலும் ரீமேக் செய்து வெளியிடப்பட்டன. இவையும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தன.
77
Nuvvostanante Nenoddantana Remake in Hindi
இந்தியில் படுதோல்வி
பின்னர் இறுதியாக 2013-ம் ஆண்டு `ராமையா வஸ்தவய்யா' என்ற பெயரில் இந்தியில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்தை பிரபு தேவா இயக்கி இருந்தார். இதில் கிரிஷ் குமாரும், ஸ்ருதிஹாசனும் நடித்திருந்தனர். இருப்பினும், இப்படம்பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.