சம்மர் விடுமுறையை முன்னிட்டு சூரியின் 'மாமன்', சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின. முதல் நாள் வசூல் வசூல் நிலவரத்தைக் காணலாம்.
சம்மர் விடுமுறையை முன்னிட்டு கோலிவுட்டில் பல புதிய படங்கள் இந்த வாரம் வெளியானது. அதுவும் ஒரே நாளில் சூரி, சந்தானம், யோகிபாபு என மூன்று நகைச்சுவை நடிகர்களின் படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில், இரண்டு முக்கியமான படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஒன்று நடிகர் சூரியின் மாமன், மற்றொன்று சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் ஆகும்.
25
நடிகர் சூரியின் மாமன் திரைப்படம்
மாமன் திரைப்படத்தில் காமெடி நடிகரான சூரி, கதாநாயகனாக மீண்டும் ஒரு தடவை கலக்கியுள்ளார். இவர் எழுதிய கதையை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், ராஜ்கிரண், பாலா சரவணன், ஸ்வாசிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்பம், உறவுகள், மற்றும் தாய் மாமனின் பொறுப்புகளை சொல்லும் இந்த படம், குடும்ப ரசிகர்களிடம் ஹிட் ஆவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது.
35
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம்
மறுபுறம், டிடி நெக்ஸ்ட் லெவல் என்பது சந்தானத்தின் காமெடி பேய் படங்களின் தொடர்ச்சியில் வந்துள்ள புதிய முயற்சி. தில்லுக்கு துட்டு படம் ஹிட் ஆன பிறகு, இவர் நடித்து வரும் இதுவும் ஒரு காமெடி ஹாரர் படம். இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், கெளதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், செல்வராகவன் உள்ளிட்ட பலர் சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது என்ற விமர்சனமும் வெளியாகி இருக்கிறது.
கருடன் படத்தின் மூலம் 50 கோடி ரூபாய் வசூலை அடைந்த சூரி, மாமன் படம் மூலம் அந்த வெற்றியை மீண்டும் நிலைநிறுத்துவாரா? என்றே கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இரு படங்களின் நேற்றைய முதல் நாள் வசூல் விவரங்கள் வெளியாகி உள்ளது.
55
டிடி நெக்ஸ்ட் லெவல் வசூல்
அதன்படி நடிகர் சந்தானம் நடித்து, ஆர்யா தயாரித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் சுமார் 2.54 கோடியையும், நடிகர் சூரி நடித்துள்ள மாமன் திரைப்படம் முதல் நாள் ரூ.1.53 கோடியையும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.