Vishal Love Marriage : விஷாலுக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சங்கம் கட்டிடம் திறப்பு விழா முடிந்த பிறகு அவருக்கு கல்யாணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Vishal Love Marriage : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் செல்லமே படம் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, பூஜை, துப்பறிவாளன் என்று பல ஹிட் படங்களை கொடுத்தார். கடைசியாக மத கஜ ராஜா என்ற காமெடி படத்தை ஹிட் கொடுத்தார். இப்போது துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
24
விஷாலுக்கு காதல் திருமணம்
இந்தப் படத்திற்கு பிறகு வேறு எந்த படமும் அவருக்கு கை வசம் இல்லை. இந்த நிலையில்தான் விஷாலுக்கு திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதற்கு காரணம் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று விஷால் கூறியிருந்தது தான்.
34
விஷால் திருமணம்
அப்போது நடிகர் சங்கம் கட்டி முடிக்கப்பட்டதா என்றால் இல்லை. ஆனால், அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இன்னும் 2 மாதங்களுக்குள்ளாக நடிகர் சங்க கட்டிடம் கட்டுமான வேலைகள் அனைத்தும் முடிந்து திறப்பு விழா நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் விஷால் தனக்கு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறியிருக்கிறார். நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முடிந்து செப்டம்பரில் திருமணம் நடைபெறும். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷாலின் பிறந்தநாளின் போது வெளியாக இருக்கிறது.
இது குறித்து விஷால் கூறியிருப்பதாவது: வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 29ஆம் தேதி எனது பிறந்தநாள் என்பதால் அந்த நாளில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன். என்னுடைய திருமணம் காதல் திருமணமாக இருக்கும். சில மாதங்களாக காதல் கதை ஓடிக் கொண்டிருக்கிறது. என்னுடைய காதலி யார் என்பது குறித்து நான் சில மாதங்களில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு நான் சினிமாவிற்கு வந்தேன். இப்போது 21 வருடங்கள் கடந்து விட்டது. மக்கள் தான் என்னுடைய சொத்து. அவர்கள் இல்லை என்றால் நான் இன்று நடிகராக இருந்திருக்க முடியாது என்று கூறியிருக்கிறார். வேதம் படத்தில் நடிகர் அர்ஜூனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதன் பிறகு தான் செல்லமே படம் மூலமாக நடிகரானார் என்பது குறிப்பிடத்தக்கது.