பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமோருவுடன் சமந்தா காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் பரவி வந்த நிலையில் இதுகுறித்து சமந்தாவின் மேனேஜர் விளக்கமளித்துள்ளார்.
நடிகை சமந்தா - பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமோருவை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் வதந்திகள் பரவி வந்தன. சமீப காலமாக இருவரும் ஜோடியாக காணப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமின்றி, இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை சமந்தா சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார். அண்மையில் ராஜ் நிதிமோருவின் தோளில் சாய்ந்தபடி எடுத்த புகைப்படத்தை அவர் பதிவிட்டால் அது காதல் வதந்திகளுக்கு மேலும் வலு சேர்த்தது.
24
ராஜ் நிதிமோரு மனைவியின் சூசக பதிவு
ராஜ் நிதிமோருவின் மனைவி ஷியாமளியும் இந்த உறவு குறித்து மறைமுகமாக பதிலளித்துள்ளார். "என்னைப் பற்றி நினைப்பவர்களுக்கு, பார்ப்பவர்களுக்கு, கேட்பவர்களுக்கு, பேசுபவர்களுக்கு, எழுதுபவர்களுக்கு, சந்திப்பவர்களுக்கு அன்புடன் வாழ்த்துகிறேன்" என்று அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தது வைரல் ஆனது. இதனால் சமந்தா - ராஜ் நிதிமோருவின் காதல் விவகாரம் தென்னிந்திய திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.
34
தயாரிப்பாளராக மாறிய சமந்தா
சமந்தா அண்மையில் சுபம் என்கிற படத்தை தயாரித்து இருந்தார். அப்படம் கடந்த மே 9-ந் தேதி திரைக்கு வந்தது. இதனிடையே சமந்தாவும், ராஜும் மும்பையில் வீடு ஒன்றை பார்த்து வருவதாகவும், விரைவில் இருவரும் ஜோடியாக மும்பையில் குடியேற இருப்பதாகவும் செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில், சமந்தாவின் மேனேஜர் அவரைப்பற்றிய காதல் வதந்திகள் பற்றி முதன்முறையாக பதிலளித்து உள்ளார்.
அதன்படி சமந்தாவை பற்றிய காதல் வதந்திகள் எதுவும் உண்மையில்லை என்று கூறியுள்ளார். ஆனால், மேனேஜரின் விளக்கத்திற்கும், சமந்தாவின் செயல்களுக்கும் பொருத்தமில்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் இனி திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என கூறி இருந்தார். ஆனால் அவரின் சமீபத்திய செயல்கள் சர்ச்சையில் சிக்கிய நிலையில், அவரின் மேனேஜர் அந்த காதல் விவகாரத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.