நயன்தாரா அம்மன் மட்டுமில்ல; மூக்குத்தி அம்மன் 2 படத்தில் காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்!

Published : May 16, 2025, 01:58 PM IST

நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
Nayanthara Play Dual Role in Mookuthi Amman 2

நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2020-ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி இருந்தார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அப்படத்தையும் ஐசரி கணேஷ் தான் தயாரிக்கிறார்.

24
மூக்குத்தி அம்மன் 2 பட்ஜெட்

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நயன்தாரா உடன் இனியா, ரெஜினா கசெண்ட்ரா, சிங்கம் புலி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தை பான் இந்தியா பாடமாக உருவாக்க உள்ளதால், பிறமொழியை சேர்ந்த நடிகர்களும் இதில் நடிக்கிறார்கள். குறிப்பாக கன்னட நடிகர் துனியா விஜய் தான் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தை சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார் ஐசரி கணேஷ்.

34
மூக்குத்தி அம்மன் 2 பட சர்ச்சை

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை பொள்ளாச்சியில் நடத்த திட்டமிட்ட படக்குழு திடீரென சென்னையிலேயே ஷூட்டிங்கை நடத்தி வந்தது. இதனால் இயக்குனருக்கும் நயன்தாராவுக்கும் இடையே மோதல் என்றெல்லாம் பேச்சு அடிபட ஆரம்பித்தது. இதற்கு கேங்கர்ஸ் பட புரமோஷனின் போது பதிலளித்த சுந்தர் சி. சண்டையெல்லாம் எதுவும் இல்லை, அது வெறும் வதந்தி என்றும், கேங்கர்ஸ் பட பணிகள் இருந்ததால் தான் பொள்ளாச்சிக்கு பதில் சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்தியதாக தெரிவித்தார்.

44
இரட்டை வேடத்தில் நடிக்கும் நயன்தாரா

இந்நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படத்தை பற்றிய மற்றுமொரு ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். கடைசியாக ஐரா படத்தில் டபுள் ரோலில் நடித்த நயன், அதன்பின்னர் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் தான் அவ்வாறு நடிக்கிறார். அதில் ஒன்று அம்மனாக நடிக்கும் நயன்தாரா மற்றொரு ரோலில் போலீஸாக நடித்து வருகிறாராம். இதனால் ரசிகர்களுக்கு படத்தில் டபுள் ட்ரீட் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories