மீண்டும் காமெடியனாக களமிறங்கும் சந்தானம்! அதற்குள் இத்தனை படங்களில் கமிட்டாகிவிட்டாரா?

Published : Jan 22, 2025, 07:34 AM IST

ஹீரோவான பின்னர் நகைச்சுவை வேடங்களில் நடிக்காமல் இருந்த சந்தானம் தற்போது மீண்டும் காமெடி வேடங்களில் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறாராம்.

PREV
14
மீண்டும் காமெடியனாக களமிறங்கும் சந்தானம்! அதற்குள் இத்தனை படங்களில் கமிட்டாகிவிட்டாரா?
santhanam

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் சந்தானம். அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பின்னர் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த சந்தானம், தன்னுடைய டைமிங் காமெடிகளால் ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்தார். சந்தானம் இல்லாத படமே தமிழ் சினிமாவில் இல்லை என சொல்லும் அளவுக்கு ஒரு காலத்தில் முன்னணி காமெடியனாக கொடிகட்டிப் பறந்த சந்தானம், ஒரு கட்டத்தில் காமெடி வேடங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஹீரோவாக களமிறங்கினார்.

24
santhanam Movie Line Up

இவர் ஹீரோவாக நடித்த படங்களிலும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தாலும், அவரால் வெற்றியை ருசிக்க முடியவில்லை. குறிப்பாக கொரோனா காலகட்டத்துக்கு பின் சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. இதனால் அவரது கெரியர் அவ்வளவு தான் என கூறப்பட்டு வந்த சமயத்தில் டிடி ரிட்டர்ன்ஸ் படம் மூலம் கம்பேக் கொடுத்தார் சந்தானம். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அப்படம் வருகிற மே மாதம் திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... சூர்யாவுக்கு ஆப்பு வைக்க ரெடியான சந்தானம்; டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

34
Santhanam Upcoming Movies

என்னதான் சந்தானம் ஹீரோவாக நடித்தாலும், அவர் காமெடி வேடங்களில் நடிப்பதை ரசிகர்கள் எவ்வளவு மிஸ் பண்ணுகிறார்கள் என்பதற்கு அண்மையில் வெளியன மதகஜராஜா படமே ஒரு எடுத்துக்காட்டு. அப்படத்தில் சந்தானத்தின் காமெடியை பார்த்து வயிறுகுலுங்க சிரிக்கும் ரசிகர்கள், அவரை மீண்டும் காமெடி வேடங்களில் நடிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வந்தனர். தற்போது ரசிகர்களின் கோரிக்கைக்கு சந்தானம் செவி சாய்த்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

44
Santhanam, Arya

அதன்படி அவர் அடுத்தடுத்து மூன்று படங்களில் காமெடியனாக நடிக்க உள்ளாராம். அதில் ஒரு படத்தில் நடிகர் ரவி மோகன் உடன் சேர்ந்து நடிக்க உள்ளாராம். மற்ற இரண்டு படங்களில் ஆர்யா உடன் ஒரு படத்திலும், விஷால் உடன் ஒரு படத்திலும் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சந்தானம். அவரின் இந்த முடிவால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் காமெடியனாக தான் விட்டுச் சென்ற வெற்றிடத்தை மீண்டும் அவரே நிரப்ப வந்துள்ளதால் இனி சந்தானத்தின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயரவும் வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்...  காமெடியால் கல்லாகட்டியவர்; நடிகர் சந்தானம் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?

Read more Photos on
click me!

Recommended Stories