எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நடித்து பல சாதனைகளை படைத்தவர் அஜித் குமார். எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்று 2 படங்கள் உருவாகியிருக்கிறது. இதில், விடாமுயற்சி படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் த்ரிஷா இருவரும் முன்னணி ரோலில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஆரவ், அர்ஜூன், ரெஜினா ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
25
Ajith Kumar and Trisha Pair in Vidamuyarchi
இந்தப் படம் முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு, இப்போது பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக அஜித் மற்றும் த்ரிஷா இருவரது காம்போவில் வந்த ஜி, என்னை அறிந்தால் போன்ற படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் அஜித் மற்றும் த்ரிஷாவின் காம்போவில் உருவான படம் தான் ஜி. கடந்த 2005 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு கடைசியில் பிப்ரவரி 11ம் தேதி வெளியானது.
45
Pongal Release Expected Movie
ஜி படம் திரைக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு பின் 2015 ஆம் ஆண்டு இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் மற்றும் த்ரிஷா காம்பினேஷனில் உருவான என்னை அறிந்தால் படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு பின்னர் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியாகி ஹிட் கொடுத்தது.
அதே போன்று தான் இப்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஜித் மற்றும் த்ரிஷா காம்போவில் உருவான விடாமுயற்சி படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.