Kantara Movie
தேசிய விருது பெற்ற ரிஷப் ஷெட்டி, காந்தார ப்ரீக்வெல் படத்தின் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்த காத்திருக்கிறார். ராஜ வம்சப் பின்னணியில் உருவாகும் இப்படம், மிகவும் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதுகுறித்த தகவலை பார்ப்போம்.
Kantara Prequel
கடந்த 2022-ஆம் ஆண்டு பான்-இந்தியா திரைப்படமாக நாடு முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. இயக்குனரும் - நடிகருமான ரிஷப் ஷெட்டி, தனது கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த படத்தை இயக்கி - முடித்திருந்தார். இதுவரை எத்தனையோ படங்கள் வெளியாகி இருந்தாலும், 'காந்தாரா' மூலம் இதுவரை படமாக்கப்படாத, பழங்குடி மக்களின் கலாச்சாரம், மற்றும் அவர்கள் வணங்கும் தெய்வம் பற்றி காட்சிப்படுத்த பட்டிருந்தது. இதுவே இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.
போதையில் பேசிட்டேன் - பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ஜெயிலர் பட வில்லன் விநாயகன்!
Rishab Shetty Won National award
'காந்தாரா' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற ரிஷப் ஷெட்டி நடிப்பில் இப்போது காந்தாரா சேப்டர் 1 படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் கவிபெட்டா என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், அங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கு மக்கள் எதிர்ப்பு தெடிவித்து வருகின்றனர். அதாவது அனுமதியின்றி வனப்பகுதிக்குள் படப்பிடிப்பு நடத்துவதோடு வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் சுற்றுச்சூழல் விதிமீறல்கள் நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
Kantara Chapter 1 Shoot Will Be Banned
வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்தப் படம் கடம்ப வசம்சத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. காந்தாராவிற்கு முன் என்ன நடந்தது என்பது தொடர்பான வரலாற்றை இந்தப் படம் விளக்க இருப்பதாக கூறப்படுகிறது.