Alya manasa
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசியர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற தொடர் தான் ராஜா ராணி. கடந்த 2017 ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி முதல் 2019 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி வரை ஓடியது. இந்த தொடரில் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் லீடு ரோலில் நடித்தனர். இந்த தொடரின் மூலமாக இருவரும் காதலிக்க துவங்கிய நிலையில், பின்னர் ஆல்யா பெற்றோரை மீறி கடந்த 2019 ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி சஞ்சீவை திருமணம் செய்து கொண்டனர்.
Raja Rani Serial
இப்போது சின்னத்திரை பிரபலங்கள் ஆச்சர்யப்படும் படி வாழ்ந்து வரும் இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும், அர்ஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. திருமணம் ஆகி, இரண்டு குழந்தைக்கு தாயான பின்னரும், உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆல்யா மானசா, அடுத்தடுத்து சீரியல்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
படப்பிடிப்பில் காயமடைந்த பிரபல நடிகர் மருத்துவமனையில் மரணம்!
Sun Tv Iniya Serial
இவர் ஹீரோயினாக நடித்த இனியா சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து, அடுத்ததாக விஜய் டிவியில் ஒரு சீரியலில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சின்னத்திரை ஜோடி, சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு இணைந்து பேட்டி கொடுத்துள்ளனர். அதில் தங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரேக்கப் சம்பவத்தை பற்றி மனம் திறந்து பேசியுள்ளனர் சஞ்சீவ்.
Alya And Sanjeev Kids
இந்த பிரச்சனையால் நான் அந்த தொடரில் இருந்தே விலகும் நிலைக்கு தள்ளப்பட்டேன். எங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் ஆலியா தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் வீசிங் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நான் நடித்து வந்த ரோலுக்கு வேறொரு நடிகரை நடிக்க வைக்க ஆடிஷன் கூட நடைபெற்றது. எனக்கு தெரிந்தவர்களே ஹீரோவாக நடிக்க சென்றார்கள்.
Alya Manasa Compromise
அப்படியிருந்த போது ஆலியா கொஞ்சம் சமாதானமான பிறகு, சஞ்சீவையே நடிக்க சொல்லுங்கள் என்று கூறி விட்டார். அந்த நேரத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள மாட்டோம். அவர் ஒரு ரூமிலும், நான் ஒரு ரூமிலும் இருந்தோம். இதற்கிடையில் பேசிக்கொள்ளவேமாட்டோம். அப்படியே அந்த பிரச்சனை முடிவுக்கு வந்து நண்பர் மூலமாக தூதுவிட்டு என்னிடம் பேசினார். இது எல்லாமே ஒரு வாரத்தில் நடந்தது. அதன் பிறகு இருவரும் இணைந்தோம் என்று கூறியுள்ளார்.