படப்பிடிப்பில் காயமடைந்த பிரபல நடிகர் மருத்துவமனையில் மரணம்!

Published : Jan 21, 2025, 04:24 PM IST

பிரபல  நடிகர் விஜய ரங்கராஜு, படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக சென்னையில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்ததை தொடர்ந்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  

PREV
14
படப்பிடிப்பில் காயமடைந்த பிரபல நடிகர் மருத்துவமனையில் மரணம்!
Vijaya Rangaraju Died

தெலுங்கு மற்றும் தமிழில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் விஜய ரங்கராஜு. பல படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவும், வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது, எதிர்பாராத விதமாக காயமடைந்தாக கூறப்படுகிறது. 
 

24
Vijaya Rangaraju Death in heart Attack

இதை தொடர்ந்து, சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய ரங்கராஜு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று இவருக்கு திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்திக்!

34
Viyatnat Colony Movie

தமிழை விட தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பரிச்சியமான இவரது மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் சித்திக் லால் இயக்கிய வியட்நாம் காலனி என்கிற படத்தில் ரௌத்தர் என்ற வேடத்தின் மூலம் மலையாள திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர்.

44
Vijaya Rangaraju Movies

70-வது வயதாகும் விஜய ரங்கராஜுவுக்கு சென்னையிலும் ஒரு வீடு உள்ளதாகவும் அங்கு தான் அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் நாடக நடிகராக இருந்த ரங்கராஜு பின்னர் வெள்ளித்திரைக்கு வந்தார். நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த பைரவ தீபம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் அவர் கவனிக்கப்பட்ட நடிகராக மாறினார். தமிழிலும் விஜயகாந்தின் தருமபுரி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திரஜாவுக்கு குழந்தை பிறந்தாச்சு; தாத்தா ஆன சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ரோபோ ஷங்கர்!

click me!

Recommended Stories