விஜய் டிவி மற்றும் சன் டிவியில் ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமான அஸ்வின் கார்த்திக் தன்னுடைய மனைவி காயத்ரிக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நடத்தியுள்ளார் இதுகுறித்த போட்டோஸ் இப்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சென்னையை சேர்ந்தவர் பிரபல சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்திக். கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போதே திரையுலகில் நடிக்க வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டதால், திரைப்பட வாய்ப்புகளை தேட துவங்கினார். அப்போது தான் சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
26
Vanathai Pola Serial Hero
அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான, சூப்பர் ஹிட் சீரியல் 'சரவணன் மீனாட்சி' தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மிகவும் குட்டியான கதாபாத்திரத்தில் நடித்ததால், இவருடைய கதாபாத்திரம் பெரிதாக கவனிக்கப்படவில்லை. இதை தொடர்ந்து சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குல தெய்வம், அரண்மனை கிளி, மனசு, போன்ற சீரியல்களில் நடித்தார்.
பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே தலை காட்டி வந்த இவருக்கு, ஹீரோ அந்தஸ்த்தை கொடுத்தது, சன் டிவியில் சுமார் 4 ஆண்டுகள் வரை ஒளிபரப்பான 'வானத்தை போல' சீரியல் தான். ஆரம்பத்தில், இவரின் ரோல் நெகட்டிவாக காட்டப்பட்டாலும், பின்னர் பாசிட்டிவாக காட்டப்பட்டது. இந்த சீரியல் அஸ்வின் கார்த்தி வாழக்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாகவும் அமைந்தது.
46
Ashwin Karthik Wife Gayathri
தற்போது, சமீபத்தில் துவங்கப்பட்ட 'அன்னம்' சீரியலில் நடித்து வருகிறார். அஸ்வின் கார்த்திக் கடந்த 2023-ஆம் ஆண்டு, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் காயத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில், ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.
கடந்த ஆண்டு, காயத்திரி திருமணமாக இருக்கும் தகவலை அறிவித்த அஸ்வின் கார்த்திக், அவ்வப்போது மனைவியின் பிரக்னென்சி போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.
66
Gayathri Baby Shower Photos
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் காயத்ரிக்கு, நேற்று வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த குறிப்படங்களை தற்போது அஸ்வின் கார்த்திக் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.