மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான்!

First Published | Jan 21, 2025, 10:34 PM IST

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், தனது மும்பை வீட்டில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு,  ஐந்து நாட்களுக்கு பின்னர் லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
 

Saif Ali Khan

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், தனது வீட்டில் நடந்த கொள்ளை முயற்சியின் போது கொள்ளையனால் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளானார். ஆறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சைஃப் அலிகானை அவருடைய 7 வயது மகன், தைமூர் கான் தான் மும்பை லீலாவதி மருத்துவமனைக்கு, ஆட்டோ மூலம் அழைத்து சென்றதாக கூறப்பட்டது. 
 

Saif Ali khan attacked in house

அறுவை சிகிச்சை மூலம், சைஃப் அலிகான் முதுகு படுத்தியில் பாய்ந்த 2.5 இன்ச் கத்தி அகற்றப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின்னர் சைஃப் அலிகான் நலமுடன் உள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் சைஃப் அலிகானை குத்திய கொள்ளை காரன் யார் என்று வலைபோட்டு தேடிய போலீசார் 48 மணிநேரத்திற்குள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசார் குற்றவாளியிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கொள்ளையனுக்கு பின்னல் உள்ள கும்பலையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2 படத்திற்கு வந்த புது சிக்கல்: மக்கள் எதிர்பால் பரபரப்பு!
 


police Protection

இந்நிலையில், லீலாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 நாட்களுக்கு பின்னர், தற்போது சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய பட்டுள்ளார். இந்த தகவலை பாலிவுட் செய்திகள் உறுதி செய்துள்ளது. மேலும் சைஃப் அலிகான தொர்புகொண்டு பல பிரபலங்கள் நலம் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. சைஃப் அலிகானுக்கு போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

Saif Ali khan Discharged

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், கடந்த சில வருடங்களாக ஹிந்தி திரையுலகை தாண்டி சில தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி, பிரபாஸ் நடிப்பில் வெளியான ராமாயணம் படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் வெளியான, 'தேவாரா' படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே வாரத்தில் நடந்த பிரேக்கப் - பெற்றோரை அழைத்து வந்த ஆல்யா மானசா - சஞ்சீவ் கூறிய ஷாக் தகவல்!
 

Latest Videos

click me!