சுந்தர் சி - சந்தானத்திற்கு ஒரே இடத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்ட பிறந்தநாள்! சர்பிரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி

First Published | Jan 21, 2023, 8:34 PM IST

நடிகர் சந்தானம் மற்றும் சுந்தர் சி ஆகியோரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இவர்கள் இருவருக்கும் ஒரே இடத்தில் கேக் வெட்டி கொண்டாடட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்து, முன்னணி காமெடி நடிகராக ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றவர் சந்தானம். பின்னர் இவர் ஹீரோவாக நடித்த, 'தில்லுக்கு துட்டு' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து, காமெடி வேடங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, ஹீரோ சுப்ஜெட் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.

கடந்த இரண்டு வருடங்களாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், தொடர்ந்து ஹீரோ சப்ஜெக்ட் படங்களிலேயே நடித்து வருகிறார். ஆனால் அஜித் கேட்டு கொண்டதற்காக, சந்தானம் AK 62 படத்தில் காமெடி கலந்த ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

செதுக்கி வைத்த சிலை போல்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு... ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் அசர வைத்த மாளவிகா மோகனன்!

Tap to resize

மேலும் இன்று இவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு, சந்தானம் நடித்த கிக் படத்தில் இருந்து இவரது, ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சந்தனத்தை போலவே இயக்குனர் சுந்தர் சி-யும் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு, இருவரது பிறந்தநாளை ஒரே இடத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் பிரபலங்கள்.  இதில் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ்குமரன், தயாரிப்பாளர் Romeo Pictures  ராகுல், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அம்பேத் குமார், தயாரிப்பாளர் விஜய் பாண்டி,நடிகர் விச்சு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ஆண் குழந்தை! துரதிஷ்டவசமாக பிறந்ததும் இப்படி ஒரு பிரச்சனையா?

Latest Videos

click me!