Saniya Iyappan: என் காதல் தோல்விக்கு இது தான் காரணம்! 22 வயது சானியா ஐயப்பன் கூறிய ஷாக் தகவல்!

Published : Apr 04, 2025, 11:33 AM ISTUpdated : Apr 04, 2025, 12:00 PM IST

தமிழில் ஆர் ஜே பாலாஜிக்கு ஜோடியாக, 'சொர்கவாசல்' படத்தில் நடித்து பிரபலமான சானியா ஐயப்பன் தன்னுடைய காதல் தோல்வி குறித்து முதல் முறையாக பேசியுள்ளார்.  

PREV
15
Saniya Iyappan: என் காதல் தோல்விக்கு இது தான் காரணம்! 22 வயது சானியா ஐயப்பன் கூறிய ஷாக் தகவல்!

குழந்தை நட்சத்திரமாக சானியா ஐயப்பன்:

குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் ஹீரோயினாக மாறிய நடிகைகளில் ஒருவர் சானியா ஐயப்பன். 2014 ஆம் ஆண்டு, மலையாளத்தில் வெளியான 'பாக்கியலட்சுமி' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
 

25

குயின் படத்திற்கு வாங்கிய விருதுகள்:

2018 ஆம் ஆண்டு, வெளியான 'குயின்' மலையாள படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதை, வனிதா ஃபிலிம் அவார்ட், சைமா அவார்ட் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றார். அதே போல் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்த தொடங்கினார்.
 

35

இறுகப்பற்று & சொர்கவாசல்:

அந்த வகையில் சூப்பர் டான்ஸ் 6, B4 டான்ஸ், D4 டான்ஸ் போன்ற பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தற்போது மலையாளத்தை தொடர்ந்து, தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ள சானியா ஐயப்பன் அடுத்தடுத்து சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் 2023-ஆம் ஆண்டு வெளியான இறுகப்பற்று, ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்த சொர்கவாசல் திரைப்படங்களில் நடித்திருந்தார்.

45

22 வயதே ஆகும் சானியா:

அதே போல் சமீபத்தில் மலையாளத்தில் பிரிதிவிராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான என்புரான் திரைப்படத்திலும் சானியா ஐயப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 22 வயதே ஆகும் சானியா கடந்த ஆண்டு தன்னுடைய காதல்... தோல்வியில் முடிந்ததாக பேட்டி ஒன்றில் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

55

பிரேக்கப் காரணம்:

இதற்கான காரணத்தை முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். "நான் காதலித்த நபர் எப்போதும் என்னிடம் சினிமாவில் இருக்கும் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைய மாட்டார்கள். நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள் சினிமா துறையில் இருக்க மாட்டார்கள். என அடிக்கடி கூறி வந்தார். நாம் யாரை அதிகமாக நேசிக்கிறோமோ அவர்களுடைய வாயில் இருந்து, இப்படிப்பட்ட வார்த்தையை கேட்பது அதுவும் என்னுடைய தொழிலை இழிவாகப் பேசுவது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் அவரிடம் இருந்து விலகினேன் என கூறியுள்ளார். ஆரம்பத்தில் இதை ஏற்றுக்கொள்ள என் மனம் வலித்தாலும், இப்போது நார்மல் ஆகிவிட்டேன் என சானியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories