எம்புரான் பட தயாரிப்பாளர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய திடீர் ரெய்டு!

Published : Apr 04, 2025, 11:00 AM IST

மோகன்லால் நடித்த எம்புரான் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு சொந்தமான நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறதாம். 

PREV
14
எம்புரான் பட தயாரிப்பாளர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய திடீர் ரெய்டு!

Enforcement Department raids L2 Empuraan production company! எம்புரான் திரைப்படம் மார்ச் 27 அன்று வெளியானது. பிருத்விராஜ்-மோகன்லால் கூட்டணியில் உருவான இந்த திரைப்படம், மிக விரைவாக 200 கோடி ரூபாய் வசூலித்த முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. இதற்கிடையில், சில காட்சிகளுக்காக எம்புரான் திரைப்படம் சர்ச்சைகளிலும் சிக்கியது. இறுதியில், மறு எடிட்டிங்கிற்காக அனுப்பப்பட்ட திரைப்படத்தில் 24 மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த புதிய பதிப்பு நேற்று திரையரங்குகளில் வெளியானது. எடிட்டிங்கிற்குப் பிறகு, திரைப்படத்தின் ஆன்லைன் முன்பதிவில் சிறிய சரிவு ஏற்பட்டாலும், அது படத்தின் வசூலை பாதிக்கவில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர். 

24

பாக்ஸ் ஆபிஸில் சாதனை மேல் சாதனை படைக்கும் எம்புரான்

எம்புரான் திரைப்படம் கேரளாவைப் போல் தமிழ்நாட்டிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படம் தமிழ்நாட்டில் விக்ரமின் வீர தீர சூரன் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆனது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 7 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. உலகளவில் எம்புரான் படம் ரூ.250 கோடி வசூலை நோக்கி நகர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி மலையாளத்தில் அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளிய திரைப்படம் என்கிற பெருமையையும் எம்புரான் விரைவில் பெற உள்ளது.

இதையும் படியுங்கள்... ‘எம்புரான்’ திரைப்படத்தில் 24 காட்சிகள் கட் - சுரேஷ் கோபியின் பெயர் நீக்கப்பட்டதால் சர்ச்சை!

34

எம்புரான் தயாரிப்பாளர் நிறுவனத்தில் ரெய்டு

இந்நிலையில், எம்புரான் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருகிறதாம். ஏற்கனவே எம்புரான் படம் எக்கச்சக்கமான சர்ச்சைகளில் சிக்கிய நிலையில், தற்போது அப்படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

44

எம்புரான் படத்தின் அடுத்த பாகம்

எம்புரான் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதன் மூன்றாம் பாகமும் விரைவில் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. லூசிபரின் எண்ட் கிரெடிட்ஸில் வரும் உஷா உதுப் பாடிய பாடலில்தான் இரண்டாம் பாகமான எம்புரானின் பெயரை படக்குழுவினர் முதன்முதலில் வெளியிட்டனர். அதேபோல் எம்புரானின் இறுதியிலும் உஷா உதுப் பாடிய பாடல் உள்ளது. அதில் ஒரு வார்த்தை முக்கியத்துவத்துடன் வருகிறது. அஸ்ராயேல் என்பதுதான் அது. மூன்றாம் பாகத்தின் பெயராக சினிமா ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளது

இதையும் படியுங்கள்... மத ஒற்றுமையை பேசிட்டு; இன வெறுப்பை விதைத்தது ஏன்? எம்புரானுக்கு எதிராக சீறிய சீமான்

Read more Photos on
click me!

Recommended Stories