குரல் இனிமையாக இருக்க பாம்பின் விந்தணு காக்டெயில் குடிக்கும் பாடகி!

பாடகர்கள் தங்கள் குரல் நன்றாக இருக்க பலவிதமான மருந்துகளை குடிப்பார்கள். ஆனால் இங்கே ஒரு பாடகி தன் குரல் இனிமையாக இருக்க பாம்பின் விந்தணு குடிக்கிறார்.

Singer Drinks Snake Sperm for Better Voice : நடிகர்கள் திரைப்படத் துறையில் நிலைத்திருக்கவும் தங்கள் உடற்தகுதி, அழகை அதிகரிக்கவும் என்னவெல்லாமோ செய்கிறார்கள். அதேபோல் பல பாடகர்கள் தங்கள் குரலினை பாதுகாத்துக்கொள்ள சுடு தண்ணீரை குடிக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஐஸ் கிரீம் உட்பட சில பொருட்களிலிருந்து விலகியே இருக்கிறார்கள். இங்கே ஒரு பாடகியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, அவர் தன் குரல் நன்றாக இருக்க என்ன குடிக்கிறார் என்று சொல்லியிருப்பது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாம்பின் விந்தணுவை குடிக்கும் பாடகி

அமெரிக்காவின் பிரபல பாடகி ஜெசிகா சிம்சன் (Singer Jessica Simpson) தனது இனிமையான குரலின் ரகசியத்தை வெளிப்படுத்தும் வீடியோவை பகிர்ந்துள்ளார். 44 வயதான "ஸ்வீட் கிசஸ்" மற்றும் "இன் தி ஸ்கின்" பாடகி தனது குரலை ஆரோக்கியமாக வைத்திருக்க பாம்பின் விந்தணுவை உள்ளடக்கிய சீன மூலிகைகளின் காக்டெயிலை குடிப்பதாக கூறியுள்ளார். ஜெசிகா தனது குரலை மேம்படுத்த பாம்பின் விந்தணுவை (snake sperm) உட்கொள்கிறார். அவருக்கு இசை கற்றுக்கொடுக்கும் மியூசிக் ட்ரெய்னர் பாம்பின் விந்தணுவை குடிக்க சொன்னாராம். அதனால் ஜெசிகாவும் அதை பாலோ பண்ணி வருகிறாராம்.

இதையும் படியுங்கள்... Pragathi Guruprasad: பிரபலத்துடன் காதலை உறுதி செய்த சூப்பர் சிங்கர் பிரகதி; புகைப்படம் வைரல்!


சீன மூலிகைகள் அடங்கிய காக்டெயில்

ஜெசிகா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் (Instagram video) வீடியோவை பகிர்ந்துள்ளார், அதில் அவர் தனது குரலை இனிமையாக வைத்திருக்க தான் குடிக்கும் சிறப்பு பானத்தைப் பற்றி பேசுகிறார். அவர் வீடியோவில் இருக்கும் அந்த பானத்தில் உள்ள பொருட்களின் பட்டியலை வெளிப்படுத்தியபோது, ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், இந்த பானத்தில் சீன மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று பாடகி கூறியிருக்கிறார், கூகிளில் தேடியபோது அதில் பாம்பின் விந்தணு இருப்பது தெரியவந்தது என்று கூறியுள்ளார். 

ஸ்வீட் ஆக இருக்குமாம்

அந்த கிளிப்பில், ஜெசிகா தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டே எதையோ குடித்துக்கொண்டிருக்கிறார், அப்போது நண்பர் ஒருவர் 'நீங்கள் என்ன குடிக்கிறீர்கள்?' என்று கேட்கிறார். அதற்கு ஜெசிகா அது சீன மூலிகை மாதிரி இருக்கிறது என்று பதிலளித்தார். என் பாடல் பயிற்சி கொடுப்பவர் அதை குடிக்க சொன்னார். ஆனால் கூகிள் செய்தபோது அதில் பாம்பின் விந்தணு இருப்பது தெரிந்தது, இது ரொம்ப ஸ்வீட் ஆக இருக்கு என்றார். "ஆகவே, உங்களுக்கு நல்ல பாடல் வேண்டுமானால், நீங்கள் பாம்பின் விந்தணுவை குடிக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார் ஜெசிகா.

இதையும் படியுங்கள்... இசையமைப்பாளர் தமனின் மனைவி தமிழில் இத்தனை மாஸ்டர் பீஸ் பாடல்களை பாடியுள்ளாரா?

Latest Videos

click me!