Sobhita Dhulipala: திருமணமான 4 மாதத்தில் தமிழ் நடிகருக்கு ஜோடி போடும் சோபிதா துலிபாலா!

Published : Apr 03, 2025, 07:32 PM ISTUpdated : Apr 03, 2025, 07:35 PM IST

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'வேட்டுவம்' படத்தில் தினேஷிற்கு ஜோடியாக நடிகை சோபிதா துலிபாலா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.  

PREV
14
Sobhita Dhulipala: திருமணமான 4 மாதத்தில் தமிழ் நடிகருக்கு ஜோடி போடும் சோபிதா துலிபாலா!

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வேட்டுவம்:

இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி ஆகிய பலர் நடிப்பில் கடந்தாண்டு திரைக்கு வந்த படம் தான் 'தங்கலான்'. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்போது அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு 'வேட்டுவம்' என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தில் தினேஷிற்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. 

24

லப்பர் பந்து:

பா ரஞ்சில் இயக்கத்தில் வெளியான 'அட்டகத்தி' படம் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்த தினேஷ் தான் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக லப்பர் பந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு பிறகு இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'வேட்டுவம்' என்ற படத்தில் நடிக்கிறார்.

விக்ரமின் தங்கலான் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்: மாஸ் காட்டும் சூப்பர் ஹீரோ!
 

34

படப்பிடிப்பு குறித்த அப்டேட்:
 

வரும் 18ஆம் தேதி வேட்டுவம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பூந்தமல்லி பகுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், தஞ்சாவூர் பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், தஞ்சாவூர் பகுதியில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறதாம். தங்கலான் படத்தின் படப்பிடிப்பின் போது தனது அடுத்த படத்திற்கு இங்கு படப்பிடிப்பு எடுக்க வேண்டும் என்று ரஞ்சித் திட்டமிட்டிருந்தாராம். அதன்படியே இங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம்.

44

தினேஷிற்கு ஜோடியாக சோபிதா:

இந்த நிலையில் இந்தப் படத்தில் தினேஷிற்கு ஜோடியாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சோபிதா துலிபாலா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்திற்கு பின்னர் சோபிதா திரையுலகை விட்டு விலக உள்ளதாக சில வதந்திகள் வெளியான நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருமணமான 4 மாதத்திலேயே மீண்டும் நடிக்க உள்ளார். கூடிய விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலித் மக்களின் கண்ணியத்தை இழிவுபடுத்த அரசு துணிந்திருக்கிறது! திமுகவுக்கு எதிராக கொதிக்கும் பா.ரஞ்சித்!

Read more Photos on
click me!

Recommended Stories