தயாரிப்பாளர் சங்கத்தில் ரவீனா தாஹா மீது புகார்; ரெட் கார்டு கொடுக்கப்பட்டதா? என்ன காரணம்!
சீரியல் நடிகை ரவீனா தாஹா, தன் மீது சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது உண்மை தான் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீரியல் நடிகை ரவீனா தாஹா, தன் மீது சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது உண்மை தான் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி:
சென்னையில் பிறந்து வளர்ந்தவர் தான் நடிகை ரவீனா தாஹா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு தான் 'பூவே பூச்சூடவா' என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. இந்த சீரியலில் நடித்து கொண்டே வெள்ளித்திரை வாய்ப்புகளை தேடி வந்தார்.
ரவீனா ஹீரோயினாக நடித்த திரைப்படம்:
அப்போது தான், 'நாளைய இயக்குநர்' புகழ் கல்யாண் இயக்குநராக அறிமுகமான, 'கதை சொல்ல போறோம்' படத்தில் ரவீனா தாஹாவுக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் கடந்த 2016 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி திரைக்கு வந்தது. படம் வெற்றி பெறாத காரணத்தால்... இப்படி ஒரு படம் வந்தது இப்போது வரை பலருக்கும் தெரியாமல் போனது.
ஷிவாங்கியை போல் குக் வித் கோமாளி சீசன் 5-ல் இருந்து விலகுகிறாரா ரவீனா? அவரே சொன்ன ஷாக்கிங் பதில்
குழந்தை நட்சத்திரமாக ரவீனா:
சிறு வயதிலேயே நடிப்பு தான் தன்னுடைய கரியர் என்பதை தேர்வு செய்த ரவீனா, தன்னுடைய அம்மா உதவியுடன் அதற்கு தயாராகியும் வந்தார். ஜில்லா, ராட்சசன், எனிமி, டீமன், பீட்சா 3: தி மம்மி, போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
குக் வித் கோமாளி 4:
ஆனால் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைய வைத்தது, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'மௌன ராகம் 2', சீரியல் தான். 'வேற மாரி ஆபிஸ்' சீசன் 2, 'வேற மாரி டிரிப்' போன்ற வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். இவ்வளவு ஏன், கடந்த 2023 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு அசத்தினார். அதிலும், வடிவேலு போல் கெட்டப் போட்டு இவர் செய்த அலப்பறை வேற லெவலுக்கு கவனிக்கப்பட்டது.
'சிந்து பைரவி' சீரியல் துவங்கும் முன்பே ஜூட் விட்ட ரவீனா தாஹா! வில்லியை ஹீரோயினாக்கிய விஜய் டிவி!
பிக்பாஸ் தமிழ் சீசன் 7:
பின்னர் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில், ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு 91 ஆவது நாளில் வெளியேறினார். பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது டான்சர், மணி சந்திராவை உருகி உருகி காதலித்த ரவீனா, வெளியே வந்த பின் காதலை.. காற்றில் பறக்கவிட்டு விட்டு, தன்னுடைய பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
ரவீனாவிற்கு ரெட் கார்ட்:
டான்ஸ் மீதான ஆர்வத்தால், தொடர்ந்து 'ஜோடி ஆர் யு ரெடி' என்ற டான்ஸ் ஷோவில் கலந்து கொண்டு 2ஆவது இடம் பிடித்தார். இந்த நிலையில் தான் ரவீனாவிற்கு சீரியல்களில் நடிக்க ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம், அவர் ஒரு சீரியலில் நடிக்க ஒப்பந்தமான நிலையில், அந்த சீரியலிலிருந்து திடீர் என விலகினார். இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனமானது சின்னத்திரைக்கான தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் மீது புகார் அளித்திருந்தது. இதையடுத்து ரவீனாவிற்கு ரெட் கார்ட் போடப்பட்டதன் காரணமாகவே அவர் எந்த ஒரு சீரியலிலும் இதுவரை தலைகாட்டவில்லை என சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரவியது .
வதந்திக்கு முற்றுப்புள்ளி:
இதற்கு விளக்கம் கொடுத்துள்ள ரவீனா, "தயாரிப்பாளர் சங்கத்தில் என் மீது புகார் அளிக்கப்பட்டது உண்மை தான். ஆனால், எந்தவித ரெட் கார்டும் எனக்கு போடப்படவில்லை. உண்மையில் அந்த பிரச்சனை அப்போதே சமரசமாக பேசி முடிக்கப்பட்டுவிட்டது என்று கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.