மர்மர்:
தமிழ் சினிமாவில், முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக கடந்த மாதம் (மார்ச் 7-ஆம் தேதி) ரிலீஸ் ஆன திரைப்படம் தான் 'மர்மர்'. நொடிக்கு நொடி திகிலூட்டும் காட்சிகளுடன் ரிலீஸ் தமிழகத்தில் சுமார் 100 திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் ஆன இந்த படம் இரண்டாவது நாளிலேயே, படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக தியேட்டர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது.
இயக்குனர் ஹேம்நாத் நாராயணன் என்பவர் எழுதி, இயக்கிய இப்படத்தை, எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருந்தது. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஜேசன் வில்லியம்ஸ் மேற்கொள்ள, ஒலி வடிவமைப்பு பணிகளை கெவின் ஃபிரடெரிக் மற்றும் படத்தொகுப்பு பணிகளை ரோஹித் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் 'மர்மர்' படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்த்து. ஒரு புதுவிதமான முயற்ச்சியில்... அறிமுக நடிகர்கள் நடிப்பில் வெளியான இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, 'மர்மர்' திரைப்படம் ஏப்ரல் 7-ஆம் தேதி அன்று, டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் முதல் கிங்ஸ்டன் வரை; ஏப்ரல் 4-ந் தேதி OTTயில் இத்தனை புதுப்படங்கள் ரிலீஸா?