அடேங்கப்பா ஐஸ்வர்யா ராய் பாதுகாவலரின் சம்பளம் மட்டும் இவ்வளவா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது பாதுகாவலர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

ஐஸ்வர்யா ராய் பச்சன்:

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராய் பச்சன் (Aishwarya Rai Bachchan) தனது அழகு மற்றும் நடிப்பு திறமையால் உலகம் முழுவதும் பிரபலமானவர். இதன் காரணமாகவே அவர் எது செய்தாலும் அது அதிகம் கவனிக்கப்படுகிறது. 
 

ஐஸ்வர்யாவின் பாதுகாவலர்கள்:

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் பாதுகாவலர்களில் (Bodyguard) ஒருவரான சிவராஜ் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஐஸ்வர்யா ராய் எங்கு சென்றாலும்,  அவருடன் நிழல் போல் இருப்பவர் தான் பாதுகாவலர் சிவராஜ். ஐஸ்வர்யா ராய்யின் நம்பிக்கைக்குரிய நபராகவும் சிவராஜ் மாறியுள்ளார். பல வருடங்களாக சிவராஜ், ஐஸ்வர்யா ராய்க்கு பாதுகாவலராக உள்ளார்.

ஐஸ்வர்யா ராய் கார் மீது மோதிய மும்பை பேருந்து; என்ன நடந்தது?


பாதுகாவலர்கள் பொறுப்பு:

ஐஸ்வர்யாவின் பிரபலத்தை கருத்தில் கொண்டு, அவரது பாதுகாவலர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம் கண் சிமிட்டும் நேரத்தில் கூட ரசிகர்களுடைய கூட்டத்தில் பிரபலங்கள் சிக்கலாம். எனவே எப்போதும் எவ்வித அசம்பாவிதமும் நேராமல் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பாதுகாவலர்களின் பெரிய பொறுப்பாகும்.

குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பாதுகாவலர்:

ஐஸ்வர்யா ராய் பச்சனின் பாதுகாவலர் சிவராஜ் (Bodyguard Shivaraj) அவரைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவரது குடும்பத்திற்கும் மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யாவின் திருமணத்தில் கூட கலந்து கொண்டாராம். அதே போல் ஐஸ்வர்யா ராய்யும் இவரை தன்னுடைய குடும்பத்தில் ஒருவராகவே பார்ப்பதாக கூறப்படுகிறது.

ரூ.4600 கோடி சொத்து மதிப்பு; ராணி போல் வாழும் இந்தியாவின் பணக்கார நடிகை யார் தெரியுமா?

பாதுகாவலர்களின் சம்பளம்:

சமீபத்திய தகவல்களின்படி, ஐஸ்வர்யா ராய் தனது பாதுகாவலர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார். சிவராஜின் உண்மையான சம்பளம் எவ்வளவு என்று வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும், அவர் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான ரூபாய் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

பாதுகாவலர் ராஜேந்திர தோலே:

ஐஸ்வர்யாவின் இரண்டாவது பாதுகாவலர் ராஜேந்திர தோலேவின் சம்பளத்தைப் பற்றி கூறினால், அவரது ஒரு வருட சம்பளம் (annual package) சுமார் 1 கோடி ரூபாய் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. அதாவது நட்சத்திரங்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்படும் பாதுகாவலர்களுக்கு இது போல் அதிக தொகை சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா வழக்கு; கூகுளுக்கு நோட்டீஸ்; நீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?

பாதுகாவலர்களின் வேலை:

பாதுகாவலர்களின் பொறுப்பு, பிரபலங்களை கூட்டத்திலிருந்து பாதுகாப்பதோடு மட்டும் இன்றி, எந்த ஒரு ஆபத்தும் அவர்களை நெருங்க விடாமல் எச்சரிக்கையாக வைத்திருப்பதும் கூட. குறிப்பாக ஐஸ்வர்யாவின் பாதுகாவலர்கள் எந்நேரமும் மிகவும் விழிப்புடன் இருந்து அவர்களை பாதுகாத்து வருகிறார்கள்.

தொழில்நுட்ப வல்லுநரும் கூட:

ஐஸ்வர்யா ராய்யின், முதல்கட்ட பாதுகாவலரான சிவராஜ் ஒரு பாதுகாவலர் மட்டுமல்ல, தொழில்நுட்ப வல்லுநரும் கூட. இவர் பாதுகாப்பின் மேம்பட்ட நுட்பங்களை நன்கு புரிந்து கொண்டுள்ளார் மற்றும் எந்தவொரு அவசர நிலையையும் சமாளிக்க தயாராக இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய் சல்மான் கானின் வாழ்க்கையை அழித்தாரா? சோஹைல் கான் பகிர்ந்த தகவல்!

பாதுகாவலர்களுக்கு நல்ல சம்பளம்:

பாலிவுட்டின் பல பிரபலங்கள் தங்கள் பாதுகாவலர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள், ஏனெனில் அவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. ஐஸ்வர்யா தனது பாதுகாப்பு ஊழியர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறார் மற்றும் அவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!