இது ஒரு காவிய காதல்.... புத்தாண்டு பிறந்ததும் குட் நியூஸ் சொன்ன சமந்தாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

First Published | Jan 2, 2023, 11:33 AM IST

நடிகை சமந்தாவுக்கு 2022-ம் ஆண்டின் கடைசி சில மாதங்கள் மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வந்த நிலையில், தற்போது புத்தாண்டு பிறந்துள்ள வேளையில் அவர் குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார்.

நடிகை சமந்தா, நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் சினிமாவில் பிசியாக நடித்து வந்தார். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலகில் இருந்து பட வாய்ப்புகளும் அவருக்கு குவிந்து வந்தன. இதனால் அரை டஜன் படங்களை கைவசம் வைத்து செம்ம பிசியான நடிகையாக வலம் வந்த சமந்தாவுக்கு கடந்த அக்டோபர் மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அவருக்கு மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக ஒரு மாதத்திற்கு மேல் சிகிச்சை பெற்று அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்த சமந்தா, கடந்த நவம்பர் மாதம் தனது யசோதா படத்தின் புரமோஷனுக்காக சில பேட்டிகளையும் கொடுத்தார். அப்போது அந்த நோய் பாதிப்பினால் தான் எதிர்கொண்ட கஷ்டங்கள் குறித்து கண்ணீர்மல்க பேசினார்.

Tap to resize

Image: Samantha Ruth Prabhu Instagram

இதையடுத்து யசோதா படம் கடந்த நவம்பர் 11-ந் தேதி வெளியாகி வெற்றியடைந்தது. இந்த வெற்றியைக் கூட கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட நடிகை சமந்தா, உடல்நிலை மோசமானதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தென் கொரியாவுக்கு சென்று சிகிச்சை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதையும் படியுங்கள்... நண்பன் விஜயகாந்த்தை சந்தித்து... கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்த சத்யராஜ் - வைரலாகும் வீடியோ

இந்த நோய் பாதிப்பின் காரணமாக சமந்தா நடிக்க கமிட் ஆகி இருந்த சில பட வாய்ப்புகளும் அவரைவிட்டு நழுவிச் சென்றன. இவ்வாறு 2022-ம் ஆண்டின் கடைசி சில மாதங்கள் சமந்தாவுக்கும் மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வந்த நிலையில், தற்போது புத்தாண்டு பிறந்துள்ள வேளையில் குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார் சமந்தா.

அது என்னவென்றால், அவர் நடிப்பில் உருவாகி உள்ள சாகுந்தலம் என்கிற திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கப்பட்டு உள்ளது. காவிய காதல் படமான இதில் நடிகை சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். இப்படத்தை குணசேகர் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 17-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாலம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமந்தாவுக்கு இந்தப்படமும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... போனி கபூர் தயாரிப்பில் பாலிவுட்டில் ரீமேக் ஆகும் லவ் டுடே... ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

Latest Videos

click me!