போனி கபூர் தயாரிப்பில் பாலிவுட்டில் ரீமேக் ஆகும் லவ் டுடே... ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

First Published | Jan 2, 2023, 10:19 AM IST

லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வந்த நிலையில், இறுதியாக தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றி உள்ளார். 

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய படம் லவ் டுடே. இப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார் பிரதீப். அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகிபாபு போன்ற சீனியர் நடிகர்களும் நடித்திருந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

லவ் டுடே திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.90 கோடிக்கு மேல் கலெக்‌ஷன் அள்ளி வசூல் வேட்டை ஆடியது.

இதையும் படியுங்கள்... இது ராஷ்மிகா எடுத்த போட்டோ தான?.. புத்தாண்டு புகைப்படத்தால் ரசிகர்களிடம் வசமாக சிக்கிக் கொண்ட விஜய் தேவரகொண்டா

Tap to resize

தமிழில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டார் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு. தமிழைப் போல் தெலுங்கிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் டோலிவுட்டிலும் இப்படம் ஹிட் ஆனது. இதையடுத்து இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வந்தது.

இறுதியாக லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் உரிமையை துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றி உள்ளார். இப்படத்தை இந்தியில் டேவிட் தவான் இயக்க உள்ளதாகவும், அவரது மகனும் முன்னணி பாலிவுட் நடிகருமான வருண் தவான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழில் ஹிட்டாகி இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட காஞ்சனா, ராட்சசன், ஜிகர்தண்டா ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், தற்போது லவ் டுடே அந்த லிஸ்ட்டில் இடம்பெறாமல் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... ஹீரோயின் போல் ஜொலிக்கும் அஜித் மகள்... குடும்பத்துடன் குதூகலமாக புத்தாண்டை கொண்டாடிய ஏகே - வைரலாகும் போட்டோஸ்

Latest Videos

click me!