இணையத்தில் வெளியான ஆபாச புகைப்படங்கள்... ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகை போலீஸில் பரபரப்பு புகார்

First Published | Jan 2, 2023, 9:26 AM IST

ராஜா ராணி 2 சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரவீனா, தன்னுடைய புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சைபர் கிரைம் போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். 

கேரளாவைச் சேர்ந்தவர் பிரவீனா. இவர் தமிழில் தற்போது வெற்றிகரமாக ஓடி வரும் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஹீரோவின் தாயாக நடித்து வருகிறார் பிரவீனா. இவர் மலையாளத்திலும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி தமிழில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி உள்பட சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

ராஜா ராணி 2 சீரியல் மூலம் பிரபலமான பிரவீனா, கடந்த ஆண்டு தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து, சமூக வலைதளங்களில் போலி கணக்கு தொடங்கி அதில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் டெல்லியில் ஒருவரை கைது செய்தனர். பின்னர் அந்த நபர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதையும் படியுங்கள்.... இது ராஷ்மிகா எடுத்த போட்டோ தான?.. புத்தாண்டு புகைப்படத்தால் ரசிகர்களிடம் வசமாக சிக்கிக் கொண்ட விஜய் தேவரகொண்டா

Tap to resize

இந்நிலையில், தற்போது மீண்டும் பிரவீனா சைபர் கிரைம் போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் என்னுடைய புகைப்படத்தையும், எனது சகோதரி மற்றும் எனது மகளின் புகைப்படத்தையும் ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பழிவாங்கும் நோக்கத்தோடு இவ்வாறு செய்து வருவதாகவும், இதற்காக தனது பெயரில் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் 100-க்கும் மேற்பட்ட போலி கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில் தன்னை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருவதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார். தனது மகளுடன் சென்று கேரளாவில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் இந்த புகார் மனுவை கொடுத்துள்ளார் பிரவீனா.

இதையும் படியுங்கள்.... ஹீரோயின் போல் ஜொலிக்கும் அஜித் மகள்... குடும்பத்துடன் குதூகலமாக புத்தாண்டை கொண்டாடிய ஏகே - வைரலாகும் போட்டோஸ்

Latest Videos

click me!