அட்லீ - அல்லு அர்ஜுன் படம்
ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இப்படம் வெளியாக வாய்ப்புள்ளது. சன் பிக்சர்ஸ் அதிக செலவு செய்து எடுக்கும் படமாக இது இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சல்மான் கானை வைத்து படம் இயக்க அட்லீ முயற்சி செய்தார். ஆனால் அதிக பட்ஜெட் மற்றும் தென்னிந்திய சூப்பர் ஸ்டாரின் தேதிகள் கிடைக்காததால் இந்த படம் கைவிடப்பட்டது. சல்மான் கான் இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.