அஜித் பட ரீமேக்கில் நடிக்க மறுத்த நயன்தாரா - அதுவும் இந்த ஸ்டார் ஹீரோவுடனா?

நடிகை நயன்தாரா, தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த அஜித் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். அது என்ன படம் என்பதை பார்க்கலாம்.

why Nayanthara Reject Pawan Kalyan's Film Reasons and Analysis gan
Nayanthara Rejected Pawan Kalyan Movie

பவன் கல்யாண் படத்தில் நடிப்பதை நடிகைகள் அதிர்ஷ்டமாக கருதுகிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று ஓடோடி சென்று நடிக்கிறார்கள். பவர் ஸ்டார் படத்தில் சிறிய வேடம் கிடைத்தாலும் போதும் என நடிப்பவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஸ்ருதிஹாசனும் ஒருவர். அவர் பவர் ஸ்டார் உடன் கப்பர் சிங் படத்தில் முழு நீள கதாநாயகியாக நடித்தார். வக்கீல் சாப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தும் அசத்தினார். ஆனால் ஒரு நடிகை மட்டும் பவன் கல்யாண் படத்தில் நடிக்க முடியாது என்று கூறினாராம்.

why Nayanthara Reject Pawan Kalyan's Film Reasons and Analysis gan
Nayanthara, Pawan Kalyan

பவன் கல்யாண் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா

அந்த நடிகை வேறு யாருமல்ல நயன்தாரா. அவர் நிராகரித்த படம் வக்கீல் சாப். ஆனால் இந்த படத்தை அவர் நிராகரிக்க காரணம் உள்ளது. பவர் ஸ்டார் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கும் ஆசைதான் ஆனால் அந்த கதாபாத்திரம் மிகவும் சிறியது என்பதால் அவர் யோசித்தார். வக்கீல் சாப் படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு நினைத்ததாம்.

இதையும் படியுங்கள்... ஆத்தாடி... நடிகை நயன்தாரா கைவசம் உள்ள படங்கள் இத்தனையா?
 


Nayanthara

அஜித் பட ரீமேக்

ஆனால் அந்த கதாபாத்திரத்தின் நேரம் மிகவும் குறைவு என்பதால் நயன் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். நயன் ஏற்கனவே முன்னணி நடிகையாக தொடர்ந்து படங்களில் பிஸியாக இருந்தார். அதனால் அவர் சிறிய கதாபாத்திரத்திற்காக தேதிகள் ஒதுக்க முடியாது என்று கூறினாராம். அப்படி பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நயன்தாரா தவறவிட்டார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக் தான் இந்த வக்கீல் சாப் திரைப்படம்.

Pawan Kalyan

சினிமாவில் இருந்து விலகும் பவன் கல்யாண்?

பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேச துணை முதல்வராக மிகவும் பிஸியாக இருக்கிறார். தற்போது படங்களில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார் பவன் கல்யாண். இனி பவன் படங்கள் வேண்டாம் என்று ஓய்வு அறிவித்துவிட்டதாக கூறுகிறார்கள். ரசிகர்களுக்காக அவர் மீண்டும் படங்களில் நடிப்பாரா..? அல்லது அவர் ஓய்வு பெற்று தனது வாரிசு அகிராவை களத்தில் இறக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சமீபத்தில் பவன் கல்யாண் தொடர்பான இந்த பழைய செய்தி வைரலாகி வருகிறது. 

இதையும் படியுங்கள்... அரசியலில் இந்த தப்ப மட்டும் பண்ணீடாதீங்க; விஜய்க்கு பவன் கல்யாண் அட்வைஸ்

Latest Videos

vuukle one pixel image
click me!