ஒரு படத்துக்கு 300 கோடி சம்பளம்! ராஜ வாழ்க்கை வாழும் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு

Published : Apr 08, 2025, 08:50 AM ISTUpdated : Apr 08, 2025, 08:51 AM IST

Allu Arjun Net Worth : நடிகர் அல்லு அர்ஜுன் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
17
ஒரு படத்துக்கு 300 கோடி சம்பளம்! ராஜ வாழ்க்கை வாழும் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு
Allu Arjun Birthday

தெலுங்கு திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் மகனான இவர், கடந்த 2003-ம் ஆண்டு வெளியான கங்கோத்ரி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவருக்கு திருப்புமுனை கொடுத்த படம் ஆர்யா. கடந்த 2004-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். இதையடுத்து தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த அல்லு அர்ஜுன், புஷ்பா படம் மூலம் பான் இந்தியா ஹீரோவாக மாறினார். இதன்பின்னர் அவர் நடித்த புஷ்பா 2 திரைப்படம் அவரை உலகளவில் பேமஸ் ஆக்கியது.

27
Allu Arjun Salary

300 கோடி சம்பளம்

புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1800 கோடிக்கு மேல் வசூலித்து இந்திய சினிமாவையே வியக்க வைத்தது. புஷ்பா படம் மூலம் பான் இந்தியா ஸ்டார் ஆன அல்லு அர்ஜுன், அப்படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றியடைந்ததை அடுத்து தன்னுடைய சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்தினார். அவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.300 கோடி சம்பளமாக வாங்குகிறார். இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் அல்லு அர்ஜுன் தான்.

37
Allu Arjun Awards

தேசிய விருது வென்ற முதல் ஹீரோ

புஷ்பா படம் மூலம் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதும் கிடைத்தது. தெலுங்கு திரையுலக வரலாற்றில் இதுவரை எந்த ஒரு ஹீரோவும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றதில்லை என்கிற நிலை பல வருடங்களாக இருந்தது. புஷ்பா படம் மூலம் அதை தகர்த்தெறிந்து, தேசிய விருது வென்ற முதல் தெலுங்கு ஹீரோ என்கிற பெருமையை பெற்றார் அல்லு அர்ஜுன்.

இதையும் படியுங்கள்... அல்லு அர்ஜூன் பெயரால் அடிக்கடி சர்ச்சை; ஜோதிடத்தின் படி பெயரை மாற்றுகிறாரா அல்லு அர்ஜூன்?

47
Allu Arjun Business

பிசினஸிலும் பிசி

சினிமாவை தாண்டி பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கிறார் அல்லு அர்ஜுன். அவர் சொந்தமாக பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை நடத்தி வருகிறார். இதுதவிர ஆஹா எனும் ஓடிடி தளத்தையும் நடத்தி வருகிறார். மேலும் பல தொழில்களிலும் முதலீடு செய்து அதன் மூலம் கோடி கோடியாய் வருவாய் ஈட்டி வருகிறார் அல்லு அர்ஜுன்.

57
Allu Arjun House

100 கோடிக்கு வீடு

அல்லு அர்ஜுனுக்கு சொந்தமாக ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் வீடு உள்ளது. சுமார் 8 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள அந்த வீட்டில் சகல வசதிகளும் உள்ளது. அந்த வீட்டின் மதிப்பு மட்டும் சுமார் 100 கோடி இருக்குமாம். 

67
Allu Arjun Net Worth

சொத்து மதிப்பு

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர் சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. சினிமா, பிசினஸ் இரண்டிலும் கொடிகட்டிப் பறக்கும் அல்லு அர்ஜுன், சுமார் 460 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார்.

77
Allu Arjun Owns Private Jet

பிரைவேட் ஜெட்

நடிகர் அல்லு அர்ஜுன் சொந்தமாக பிரைவேட் ஜெட் விமானம் ஒன்றையும் வைத்திருக்கிறார். இதுதவிர ரேஞ்ச் ரோவர், ஹம்மர், வால்வோ போன்ற சொகுசு கார்களும் அவரிடம் உள்ளன. மேலும் அல்லு அர்ஜுனுக்கு சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றும் உள்ளது. இந்த ஸ்டூடியோவை தனது தாத்தா நினைவாக 10 ஏக்கரில் பிரம்மாண்டமாக கட்டி இருக்கிறார் அல்லு அர்ஜுன்.

இதையும் படியுங்கள்... அட்லீ படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் - எவ்வளவு தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories