படத்துல காமெடி பீஸ்; ஆனா நிஜத்துல டைரக்டர்ஸ்! இதெல்லாம் இவங்க இயக்கிய படங்களா?
சினிமாவில் நமக்கு காமெடியனாக நன்கு அறியப்பட்ட சில நடிகர்கள், இயக்குனர்களாகவும் தங்கள் திறமையை நிரூபித்துள்ளார்கள். அதன் பட்டியலை பார்க்கலாம்.
சினிமாவில் நமக்கு காமெடியனாக நன்கு அறியப்பட்ட சில நடிகர்கள், இயக்குனர்களாகவும் தங்கள் திறமையை நிரூபித்துள்ளார்கள். அதன் பட்டியலை பார்க்கலாம்.
சினிமாவில் பன்முகத்திறமைகளை நிரூபித்த பிரபலங்கள் ஏராளம். நடிகர்கள் இயக்குனர்கள் ஆகியதையும், இசையமைப்பாளர்கள் நடிகர்கள் ஆவதையும் பார்த்திருக்கிறோம். அதேவேளையில், சினிமாவில் காமெடியனாக நடித்த பிரபலங்கள் பலர் இயக்குனர்களாக தங்கள் திறமையை நிரூபித்துள்ளார்கள். அவர்கள் யார்... யார் என்பதையும், அவர்கள் இயக்கிய படங்கள் என்னென்ன என்பதையும் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரவி மரியா
தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடியனாக அறியப்பட்ட நம்ம ரவி மரியா இரண்டு படங்களை இயக்கியுள்ளார். 2002 ஆண்டு ஆசை ஆசையாய் படத்தின் மூலம் ஜீவாவை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். 2010 இல் நட்டியை வைத்து "மிளகா" எனும் படத்தையும் இயக்கியுள்ளார்.
நாகேஷ்
காமெடியன், குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் என பன்முகம் கொண்ட நம்ம நாகேஷ் தனது பையனை ஹீரோவாக வைத்து 1985 ஆண்டு "பார்த்த ஞாபகம் இல்லையோ" எனும் ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கியுள்ளார்.
சிங்கம் புலி
பல படங்களில் காமெடியனாக நம்மை சிரிக்க வைத்த நடிகர் சிங்கம் புலி இயக்கிய இரண்டுமே பெரிய நடிகர்களின் படங்கள். 2002 இல் அஜீத்-ஐ வைத்து "ரெட்" மற்றும் 2005 இல் சூர்யாவை வைத்து "மாயாவி" படத்தையும் இயக்கினார். இரண்டுமே தோல்வி படங்கள்.
சின்னி ஜெயந்த்
90ஸ் கிட்ஸ் களின் பிடித்த காமெடியன்களில் ஒருவரான சின்னி ஜெயந்த் தன் மகனின் "நீயே என் காதலி" உட்பட மூன்று படங்களை இயக்கியுள்ளார். மூன்றுமே மாபெரும் தோல்வி படங்கள். மறைந்த நடிகர் - அரசியல்வாதி "ஜே.கே.ரித்தீஷ்" ஐ ஹீரோவாக அறிமுகப்படுத்தியதே இவர் தான்.
இதையும் படியுங்கள்... Senthil: கேங்ஸ்டராக அவதாரம் எடுக்கும் காமெடி நடிகர் செந்தில் – டிரெண்ட் செட்டுக்கு பிளான்!
காதல் சுகுமார்
"காதல்" படத்தின் மூலம் பிரபலமான வடிவேலு சாயல் கொண்ட காதல் சுகுமார் "திருட்டு விசிடி" மற்றும் "சும்மாவே ஆடுவோம்" படங்களை இயக்கியுள்ளார்.
ஸ்ரீநாத்
நடிகரும் விஜய் நண்பருமான ஸ்ரீநாத் இதுவரை மூன்று படங்களை இயக்கியுள்ளார். சந்தானம் நடித்த "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" படம் ஹிட். மற்ற இரண்டு படங்கள் "முத்திரை" மற்றும் "லெக் பீஸ்" தோல்வி அடைந்தது.
மனோபாலா
பல படங்களில் காமெடியனாக கலக்கிய மனோபாலா, ஒரு முன்னணி இயக்குனராகவும் வலம் வந்தவர். இவர் தமிழில் ரஜினி நடித்த “ஊர்க்காவலன்”, சிவாஜி கணேசனின் “பாரம்பரியம்”, விஜயகாந்த் நடித்த “என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்” உள்பட ஏராளமான ஹிட் படங்களை இயக்கி உள்ளார். இதுதவிர பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த படத்தையும் இயக்கி இருக்கிறார்.
தம்பி ராமையா
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் கலக்கும் தம்பி ராமையா 2000 ஆண்டு முரளி நடிப்பில் "மனுநீதி" , 2008 ஆண்டு "இந்திரலோகத்தில் நா அழகப்பன்" மற்றும் 2018 ஆண்டு "மணியார் குடும்பம்" ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இதையும் படியுங்கள்... மனோஜ் பாரதிராஜா இறப்புக்கு மாரடைப்பு காரணமல்ல! இது தான்! தம்பி ராமையா பேச்சு!