Tabu Join With Vijay Sethupathi in Puri Jagannadh Movie : விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அஜித் பட நடிகை நடிக்க இருப்பதாக முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது.
Tabu Join With Vijay Sethupathi in Puri Jagannadh Movie : கடின உழைப்பு, விடா முயற்சிக்கு, எதார்த்தமான நடிப்பு என்று எல்லாவற்றிற்கும் பெயர் பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. ரசிகர்கள் மீது பற்று கொண்டவர். கோலிவுட்டில் அசைக்க முடியாத நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார். ரஜினிகாந்த், விஜய்க்கு வில்லனாகவும் நடித்துள்ளார். எந்த ரோலாக இருந்தாலும் ஏற்று நடிக்க கூடியவர். கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு வில்லனாகவும் நடித்துள்ளார்.
25
Vijay Sethupathi Filmography
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா சீனாவில் வசூல் சாதனை படைத்தது. கடந்த ஆண்டு திரைக்கு வந்த விடுதலை 2 படமானது கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், டிரைன் படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
35
Vijay Sethupathi and Puri Jagannadh New Movie
இயக்குநர் பாண்டிராஜ் படம்
இதையடுத்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான டைட்டில் வைக்கப்படாத படம் ஒன்றிலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் இந்தப் படங்களைத் தொடர்ந்து இப்போது இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
45
Vijay Sethupathi Next With Puri Jagannadh
பூரி ஜெகநாத்
இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட நடிகை தபு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
55
Vijay Sethupathi and Tabu
பஜார் - தபு
இந்தப் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பஜார் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான தபு தமிழில் காதல் தேசம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே ஆகிய படன்க்களீல் நடித்துள்ளார். விஜய் சேதுபதி படத்தில் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிப்பார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.