சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க போகிறாரா குஷ்பு மகள்?

Published : Apr 07, 2025, 01:17 PM ISTUpdated : Apr 07, 2025, 01:22 PM IST

நடிகை குஷ்பு ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக கலக்கினார். தற்போது அவரது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்தப் போகிறாராம் குஷ்பு.  

PREV
14
சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க போகிறாரா குஷ்பு மகள்?
Khushbu Daughter Avantika

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இதுவரை சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்தனர். சமீபத்தில் குஷ்புவின் இளைய மகள் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது அவரின் மூத்த மகளும் சினிமாவில் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

24
khushbu, avantika khushbu

குஷ்பு மகள் அவந்திகா

குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா லண்டனில் படித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சரியான ஹீரோயின் மெட்டீரியல் என்று நிரூபிக்கிறார். இதனால் இன்ஸ்டாவில் அவருக்கு அதிக ஃபாலோவர்ஸ் உள்ளனர். இப்போது அவர் தோற்றத்தைப் பார்த்தால் கதாநாயகியாக அறிமுகமாகப் போகிறார் என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அவ்னி மூவிஸ் நிறுவனத்தை தொடங்கிய குஷ்பு – காதல் ரொமான்ஸ் காமெடி கதையை படமாக்கும் குஷ்பு!

34
Avantika

ஹீரோயினாகும் குஷ்பு மகள்?

குஷ்புவின் மகள் அவந்திகா விரைவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளதாகவும், இதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. விதவிதமான போட்டோஷூட் மூலம் சினிமாவில் ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஆர்வத்தை அவந்திகா சொல்லாமல் சொல்லி வருவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். நடிகை குஷ்புவின் ஜெராக்ஸ் காப்பி போல் இருக்கும் அவந்திகா, கதாநாயகியாக அவர் எப்போது அறிமுகமாவார் என்பது தெரியவில்லை. 

44
Avantika khushbu

அடுத்த குஷ்புவாகும் அவந்திகா

ஒருவேளை ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தால் குஷ்புவை போல் கலக்கவும் வாய்ப்பு உள்ளது. தற்போது குஷ்பு பட தயாரிப்பில் பிசியாக இருக்கிறார். அண்மையில் அவர் ஒரு படத்தை தொடங்கினார். அதேபோல் அவந்திகாவின் தந்தை சுந்தர் சி, தற்போது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார். அம்மா, அப்பாவை போல் அவந்திகாவும் சினிமாவில் எண்ட்ரி கொடுத்து கலக்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து நயன்தாரா வெளியேறிவிட்டாரா? உண்மையை உடைத்த குஷ்பு!

Read more Photos on
click me!

Recommended Stories