சூப்பர்ஸ்டார் ரஜினி உடன் நடிக்க சான்ஸ் கிடைக்காதா என நடிகைகள் ஏங்கி வந்த காலகட்டத்தில் ரஜினியே போன் போட்டு அழைத்தும் நடிக்க மறுத்திருக்கிறார் பெப்ஸி உமா.
90ஸ் கிட்ஸுக்கு மிகவும் பரிட்சயமான பெயர் பெப்ஸி உமா. அன்றைய காலகட்டத்தில் தொகுப்பாளினியாக கொடிகட்டிப் பறந்தவர் பெப்ஸி உமா. இவர் தொகுத்து வழங்கிய பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. அதில் அவர் பேசும் அழகிய தமிழுக்கு அடிமையானவர்கள் ஏராளம். அந்த காலகட்டத்தில் சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக பெயரோடும், புகழோடும் வலம் வந்தார் பெப்ஸி உமா. இவ்வளவு பாப்புலராக இருந்தும் அவர் சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை.
24
Pepsi Uma
பெப்ஸி உமா நடிக்காதது ஏன்?
சினிமாவில் நடிக்காதது பற்றி பெப்ஸி உமாவே பழைய பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதன்படி பெரிய பெரிய இயக்குனர்களிடம் இருந்து அழைப்பு வந்தும் நடிக்க மறுத்துவிட்டாராம். ஏனெனில் நடிப்பதில் அவருக்கு சுத்தமாக ஆர்வம் கிடையாதாம். எவ்வளவு அழைத்தும் நடிக்க வராத உமாவிடம், என்ன இவ்வளவு திமிரா இருக்கீங்க என இயக்குனர் கே.பாலச்சந்தரே கூறினாராம். இத்தகைய ஜாம்பவான்கள் அழைத்தும் நடிப்புக்கு நோ சொல்லி இருக்கிறார் உமா.
எந்த துறையில் பணியாற்றினாலும் ஒரு ஆர்வத்தோடு பணியாற்ற வேண்டும் என்கிற ஐடியாலஜி உடன் இருக்கும் பெப்ஸி உமா, ஆர்வம் இன்றி எந்த வேலையும் தனக்கு செய்ய பிடிக்காது என்பதால் நடிப்பின் பக்கம் செல்லவில்லையாம். கமல் சொன்னதை நினைவுகூர்ந்த உமா, ஒரு முறை கமலுடன் பேசுகையில், அவர் கக்கூஸ் சுத்தம் செய்தால் கூட முழு ஈடுபாட்டோடு செய்ய வேண்டும் என சொன்னாராம். அந்த பாலிசியை தான் பெப்ஸி உமாவும் பாலோ செய்து வருகிறாராம்.
44
Pepsi Uma Refuse to Act in Rajini Movie
ரஜினிக்கு நோ சொன்ன பெப்ஸி உமா
ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் நிராகரித்திருக்கிறார் பெப்ஸி உமா. அதுவும் ஒன்றல்ல இரண்டு முறை. அதில் ஒன்று கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான முத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க முதலில் பெப்ஸி உமாவை தான் அணுகினார்களாம். ஆனால் தனக்கு நடிப்பில் விருப்பம் இல்லாததால் நோ சொல்லிவிட்டாராம். பின்னர் ரஜினிகாந்த் போனில் அழைத்து பேசியும் உமா முடியவே முடியாது என மறுத்துவிட்டாராம். அதேபோல் இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் பெப்ஸி உமா நிராகரித்தாராம். இப்படி பெரிய நடிகர்கள் அழைத்தும் சினிமா பக்கம் செல்லாததால் தான் மக்கள் மனதில் தொகுப்பாளினியாக நிலைத்திருக்கிறார் பெப்ஸி உமா.