Published : Apr 07, 2025, 11:16 AM ISTUpdated : Apr 07, 2025, 11:20 AM IST
சசிகாந்த் இயக்கிய டெஸ்ட் திரைப்படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்து, பின்னர் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது பற்றி நடிகர் எஸ்.வி.சேகர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி சேகர், நேற்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் போட்ட பதிவு காட்டுத்தீ போல் பரவியது. அந்த பதிவில், ‘என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு, நானாக விலகினாலோ, விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. வரலாறு தொடர்கிறது’ என குறிப்பிட்டு அதனுடன் டெஸ்ட் திரைப்படத்தின் போஸ்டரையும் பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி சாபம் விடுகிறார் என கேள்வி எழுப்பி வந்தனர்.
எஸ்.வி.சேகர் எதற்காக டெஸ்ட் படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் கேட்டு வந்தனர். அதுபற்றி எஸ்.வி.சேகரே ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூறி இருக்கிறார். அதன்படி டெஸ்ட் படத்தில் நடிப்பதற்காக ஒய்நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த், எஸ்.வி சேகரை சந்தித்து தான் எடுக்கும் டெஸ்ட் திரைப்படத்தில் சித்தார்த்தின் தந்தையாக நடிக்கும்படி கேட்டிருக்கிறார். உடனே எஸ்.வி.சேகரும் கதை கூறும்படி கேட்டிருக்கிறார்.
24
Test Movie
சித்தார்த் தந்தையாக எஸ்.வி.சேகர்
சித்தார்த்துக்கு ஒரு மகன் இருக்கிறார். அவரை டெஸ்ட் மேட்சின் போது கடத்திவிடுகிறார்கள். கடத்தல் காரர்கள் சொல்லுவதுபோல் மேட்சில் விளையாடினால் உன் குழந்தையை விட்டுவிடுகிறோம் என சித்தார்த்தை மிரட்டுகிறார்கள் என சசிகாந்த் கதை சொன்னதும் பிடித்துப் போய், எஸ்.வி சேகரும் நடிக்க ஓகே சொல்லி கால்ஷீட் கொடுத்திருக்கிறார். உடனே அட்வான்ஸும் கொடுத்துவிட்டார்களாம். ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு 3 நாள் முன்னர் சசிகாந்த், எஸ்.வி. சேகரை சந்தித்து, ஒரு சின்ன பிரச்சனை என கூறி இருக்கிறார்.
என்ன விஷயம் என எஸ்.வி.சேகர் கேட்டதற்கு, நாயகன் சித்தார்த் உங்களுடன் நடிக்க மாட்டேன் என சொல்கிறார் என சசிகாந்த் கூறி இருக்கிறார். ஏன் என கேட்டதற்கு, சித்தார்த் ஒரு மோடி எதிர்ப்பாளர், நீங்கள் ஒரு மோடி ஆதரவாளர், அதனால் அவர் உங்களோடு நடித்தால், அவரை சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்துவிடுவார்கள் என பயப்படுகிறார் என சொல்லி இருக்கிறார். இதென்ன குழந்தைத்தனமா இருக்கே என எஸ்.வி.சேகர் கேட்க, இல்லை சார் அவர் இது சம்பந்தமாக என்னை டெய்லி டார்ச்சர் செய்கிறார் என சசிகாந்த் சொல்லி இருக்கிறார்.
44
S Ve Shekher
டெஸ்ட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.வி.சேகர்
நான் விலக வேண்டும் என்றால் சித்தார்த்தை எனக்கு 50 லட்சம் பணம் தர சொல்லுங்கள் என எஸ்.வி.சேகர் சொல்ல, உடனே அவரிடம் போய் பேசிவிட்டு வருவதாக கிளம்பிய சசிகாந்த், 2 நாட்களுக்கு பின் ஒரு கடிதம் அனுப்பி, கதையில் கேரக்டர் மாறிவிட்டதாகவும், அதனால் இந்த படத்தில் உங்களை நடிக்க வைக்க முடியாது என சொல்லி இருக்கிறார். இதனால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணி இருக்கிறார் எஸ்.வி சேகர். அதன் ஆதங்கத்தை தான் தற்போது ட்விட் போட்டு அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.