முன்பதிவில் காத்துவாங்கும் குட் பேட் அக்லி; அஜித் படத்திற்கு மவுசு இல்லையா?

Published : Apr 07, 2025, 02:33 PM IST

அஜித் நடிப்பில் உருவாகி உள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் முன்பதிவு வசூல் நிலவரம் பற்றி பார்க்கலாம்.

PREV
14
முன்பதிவில் காத்துவாங்கும் குட் பேட் அக்லி; அஜித் படத்திற்கு மவுசு இல்லையா?
Good Bad Ugly Pre Booking Ticket Sales Collection :

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது.

24
Ajithkumar

முன்பதிவில் டல் அடிக்கும் குட் பேட் அக்லி

குட் பேட் அக்லி படத்தின் ரிலீசுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. இப்படத்திற்கான முன்பதிவும் கடந்த வாரமே தொடங்கிவிட்டது. ஆனால் இதன் முன்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது. விடாமுயற்சி படத்தோடு ஒப்பிடுகையில், அதன் மொத்த முன்பதிவில் வெறும் 26 சதவீதம் தான் குட் பேட் அக்லி படத்திற்கு வந்துள்ளதாம். ரிலீசுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால், விடாமுயற்சிக்கு நடந்த முன்பதிவில் குட் பேட் அக்லிக்கு பாதி வருவதே சந்தேகம் தான் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... அஜித்துக்கு 285 அடி உயர கட் அவுட்; தலைகுப்புற கவிழ்ந்ததால் தெறித்தோடிய ‘தல’ ரசிகர்கள்!

34
Good Bad Ugly Ajith

குட் பேட் அக்லிக்கு மவுசு இல்லையா?

விடாமுயற்சி திரைப்படத்திற்கு மொத்தமாக முன்பதிவு மூலம் 6 லட்சத்து 89 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி இருந்தன. ஆனால் தற்போதுவரை குட் பேட் அக்லி படத்திற்கு மொத்தமாகவே 1 லட்சத்து 83 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை ஆகி இருக்கின்றன. இந்த முன்பதிவின் மூலம் மட்டும் இப்படம் ரூ.8 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. குட் பேட் அக்லி படத்திற்கு முன்பதிவு மந்தமாக இருப்பதற்கு முக்கிய காரணம் விடாமுயற்சி படம் தான் என கூறுகிறார்கள்.

44
Good Bad Ugly Pre Sales

உஷாரான அஜித் ரசிகர்கள்

ஏனெனில் விடாமுயற்சி படத்திற்கு ஓவர் ஹைப் ஏத்திவிட்டதால், அப்படத்தை எப்படியாவது பர்ஸ்ட் ஷோ பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால் அப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. இதனிடையே குட் பேட் அக்லி படத்திற்கும் படக்குழு ஓவர் ஹைப் கொடுத்து வந்தாலும், அதன் ரிசல்டை பார்த்துவிட்டு பார்க்கலாம் என்கிற மனநிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டார்கள் போல தெரிகிறது. இப்படமாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பது இன்னும் 3 நாட்களில் தெரிந்துவிடும்.

இதையும் படியுங்கள்... விஜய் பட சாதனையை அடிச்சு தூக்கிய அஜித்; புது வரலாறு படைத்த குட் பேட் அக்லி!

Read more Photos on
click me!

Recommended Stories