50 வயதிலும் அற்புதம் – இன்னும் யூத்தாக தெரியும் ஹிருத்திக் ரோஷன் டிரெண்டாக என்ன காரணம்?

Hrithik Roshan Trending in US at 50 : பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் 50 வயதான போதிலும் இன்னும் யூத்தாகவே தெரிவதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக தெரிந்து கொள்வோம்.

Hrithik Roshan Trending in US at 50 due to this reason in Tamil rsk
Hrithik Roshan, Hrithik Roshan Fitness

Hrithik Roshan Trending in US at 50 : பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். எந்தளவிற்கு சினிமாவில் நடிக்கிறாரோ அதே அளவிற்கு தனது ஃபிட்னஸிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இதுதான் அவர் 50 வயதிலும் இன்னும் இளமையாக தெரிவதற்கு காரணம். ஹிருத்திக் ரோஷன் தற்போது அமெரிக்காவில் அதிகளவில் பிரபலமாகி வருகிறார். இதற்கு என்ன காரணம் என்று யோசிக்கிறீர்களா?

Hrithik Roshan Trending in US at 50 due to this reason in Tamil rsk
Hrithik Roshan Gym Workout, Hrithik Roshan Trending in US

இதற்கு அவரது சிக்ஸ் பேக் தான் காரணம். கடந்த சில தினங்களுக்கு முன்பு TheLizVariant என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஹிருத்திக் ரோஷனின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில், 1985 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் 50 வயதில் இருப்பவர்கள் என்று குறிப்பிட்டு ஒரு அமெரிக்க பிரபலத்தின் புகைப்படத்துடன் ஒப்பிட்டுள்ளார்.


Hrithik Roshan, Hrithik Roshan Diet, Hrithik Roshan Workout

அவர் பகிர்ந்த இந்த பதிவு வைரலானதோடு 48K லைக்குகளையும் கிட்டத்தட்ட 6 மில்லியன் பார்வைகளையும் பெற்றது. இதன் காரணமாக பாலிவுட்டில் எல்லோருக்குமே தெரிந்த ஹிருத்திக் ரோஷனை அமெரிக்காவில் யார் என்று எல்லோருமே யோசிக்க தொடங்கியுள்ளனர். மேலும், வலது புறத்தில் இருப்பவர் யார், இடதுபுறத்தில் இருப்பவர் யார் என்று நெட்டிசன்கள் கமெண்டுகளில் பதிவிட்டு கேட்டுக் கொண்டனர். அதில் ஒருவர் அவர் வேறு யாருமில்லை ஹிருத்திக் ரோஷன் தான். அவர் 50 வயதிலும் இடது புறத்தில் இருப்பவரை போன்று இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Hrithik Roshan Secrets, Hrithik Roshan Walking

ஹிருத்திக் ரோஷனின் உடற்பயிற்சி:

பொதுவாகவே ஹிருத்திக் ரோஷன் வாரத்திற்கு 5 முறை உடற்பயிற்சி செய்வாராம். அதாவது, 2 நாட்கள் உடற்பயிற்சி, ஒரு நாள் ரெஸ்ட் என்று மாறி மாறி உடற்பயிற்சி செய்வதாக தகவல் தெரிவிக்கின்றது. இரவில் நன்கு தூங்கி எழுந்தால் 3 நாட்கள் உடற்பயிற்சி செய்வாராம். இல்லை என்றால் 2 நாட்கள் உடற்பயிற்சி, ஒருநாள் ரெஸ்ட் என்று இருப்பாராம்.

Hrithik Roshan, Hrithik Roshan Cardio, Hrithik Roshan Lifestyle

நடைபயிற்சி மற்றும் கார்டியோ

குறைந்தது 10 ஆயிரம் படிகள் வரையில் ஹிருத்திக் ரோஷன் நடைபயிற்சி மேற்கொள்வாராம். அதோடு 45 நிமிடங்கள் ஜாக்கிங் செய்வதற்கு செலவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

வாழ்க்கை முறை:

நாள்தோறும் 4 முதல் 5 லிட்டர் வரையில் தண்ணீர் குடிப்பாராம். மேலும், இரவு தூக்கம் ரொம்பவே முக்கியமானது. போதிய அளவு ஓய்வு என்பதை ஹிருத்திக் ரோஷன் ரொம்பவே விரும்புகிறரர்.

Hrithik Roshan, Hrithik Roshan Fitness, Hrithik Roshan Diet

உணவுமுறை:

6 முதல் 7 முறை சாப்பிடுவாராம். அப்படி சாப்பிடும் போது அவர் நாள்தோறும் பசிக்காமல் பார்த்துக் கொள்கிறாராம். அதிக புரச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வாராம். அதில், முட்டையின் வெள்ளைக்கரு, கோழி, மோர், மீன் போன்ற புரதம் உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்வாராம்.

Latest Videos

vuukle one pixel image
click me!