Samantha : உங்க கூட ‘இனப்பெருக்கம்’ செய்யணும்... நெட்டிசனின் ஆபாச கேள்விக்கு சமந்தா கொடுத்த நெத்தியடி பதில்!

Ganesh A   | Asianet News
Published : Feb 22, 2022, 12:20 PM IST

நெட்டிசனின் வரம்பு மீறிய கேள்வியை அப்படியே விட்டு விடாமல் அதற்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை சமந்தா போட்ட ரிப்ளை ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. 

PREV
16
Samantha : உங்க கூட ‘இனப்பெருக்கம்’ செய்யணும்... நெட்டிசனின் ஆபாச கேள்விக்கு சமந்தா கொடுத்த நெத்தியடி பதில்!

பல பிரபலங்கள் தங்களுடைய வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அதனை உடைத்து எரிந்து விட்டு தங்களுடைய இலக்கை நோக்கி வெற்றிநடை போட்டு வருகிறார்கள். அந்த வகையில் தான் நடிகை சமந்தா (Samantha), திருமணத்திற்கு முன்பை விட... திருமணதிற்கு பிறகு தான் பல வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

26

நாக சைதன்யாவை (Naga Chaitanya) காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் சுமார் 4 வருடங்கள் நடிப்பில் கவனம் செலுத்திய சமந்தா... திரைத்துறையில் இருந்து விலகி, குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்ட நேரத்தில் இருவருக்கும் இடையே வெடித்த கருத்து வேறுபாடு, விவாகரத்து வரை கொண்டு சென்றுவிட்டது.

36

இதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு தன்னுடைய கவலைகளை மறக்கடிக்கும் விதமாக... அவ்வப்போது சுற்றுலா, நண்பர்களுடன் பொழுதை கழிப்பது, மற்றும் அடுத்தடுத்த படங்களில் நடிப்பது என தன்னை பிசியாக வைத்து கொள்கிறார் நடிகை சமந்தா (Samantha). அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

46

அந்த வகையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார் சமந்தா (Samantha). அப்போது ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்தார் சமந்தா. பொதுவாக நடிகைகள் இவ்வாறு கலந்துரையாடும் போது சிலர் ஏடாகூடமான கேள்விகளை கேட்பதும் உண்டு.

56

அவ்வாறு சமந்தாவிடமும் நெட்டிசன் ஒருவர், நீங்கள் இதுவரை இனப்பெருக்கம் செய்திருக்கிறீர்களா?... உங்களுடன் இனப்பெருக்கம் செய்து கொள்ள எனக்கு மிகவும் ஆசையாக இருக்கிறது என கேள்வி எழுப்பினார். இதற்கு “முதலில் ஒரு வாக்கியத்தில் 'இனப்பெருக்கம்' எனும் வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்பதை கூகுளில் தேடி கற்றுக் கொள்ளுங்கள்” என நெத்தியடி பதில் கொடுத்தார் சமந்தா (Samantha).

66

நெட்டிசனின் வரம்பு மீறிய கேள்வியை அப்படியே விட்டு விடாமல் அதற்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை சமந்தா போட்ட ரிப்ளை ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. சமந்தாவின் இந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... பிரபல இசையமைப்பாளர் பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலைக்கு முயன்றேன் - நடிகை கல்யாணி பரபரப்பு பேட்டி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories