BiggBoss Ultimate : அடுத்த ஹோஸ்ட் இவரா?.. அப்போ வேறலெவல்ல இருக்குமே! - தீயாய் பரவும் தகவலால் ரசிகர்கள் குஷி

Ganesh A   | Asianet News
Published : Feb 22, 2022, 10:32 AM IST

இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் என தொடர்ந்து பிசியாக இயங்கி வருவதால், பிக்பாஸில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல் (Kamal) அறிவித்தார். 

PREV
16
BiggBoss Ultimate : அடுத்த ஹோஸ்ட் இவரா?.. அப்போ வேறலெவல்ல இருக்குமே! - தீயாய் பரவும் தகவலால் ரசிகர்கள் குஷி

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சி. தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ள இந்நிகழ்ச்சி தற்போது புதிய புதுப்பொலிவுடன் ஓடிடி-க்காக நடத்தப்படுகிறது. தமிழில் முதன்முறையாக இவ்வாறு நடத்தப்படுவதால், இதனை பிரபலப்படுத்தும் விதமாக இதற்கு முன் நடந்து முடிந்த சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்கள் 14 பேரை தேர்ந்தெடுத்து களமிறக்கி உள்ளனர்.

26

அதன்படி முதல் சீசனில் இருந்து சினேகன், ஜூலி, சுஜா வருணியும், இரண்டாவது சீசனில் இருந்து ஷாரிக்கும், தாடி பாலாஜியும், மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதாவும், நான்காவது சீசனில் இருந்து அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தியும், 5-வது சீசனில் இருந்து நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோரும் பங்கேற்றனர். 

36

இதில் முதல் வார இறுதியில் சுரேஷ் சக்ரவர்த்தியும் (Suresh chakravathy), இரண்டாவது வார இறுதியில் சுஜா வருணியும் (suja varunee) எலிமினேட் ஆகினர். மீதமுள்ள 12 பேருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்ததற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் தான்.

46

அவரது தொகுத்து வழங்கும் முறை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதனாலேயே இந்நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஏராளம். கடந்த 5 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், தற்போது ஓடிடி-க்காக நடத்தப்படும் பிக்பாஸ் அல்டிமேட் (biggboss Ultimate) நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த 3 வாரங்களாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், கடந்த வாரத்துடன் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

56

அவரின் இந்த முடிவுக்கு காரணம் பணிச்சுமை தான். இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் என தொடர்ந்து பிசியாக இயங்கி வருவதால், பிக்பாஸில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல் (Kamal) அறிவித்தார். கமல் திடீரென விலகியதால் அவருக்கு பதில் யார் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

66

ஏற்கனவே கமல் கொரோனா காரணாமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத சூழல் நிலவியபோது அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். ஆதலால் அவரே தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய தகவல்படி நடிகர் சிம்பு (Simbu) பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் பங்கேற்கும் புரோமோ ஷூட்டிங் நாளை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்.... அச்சச்சோ... சொன்ன மாதிரியே நடந்திருச்சே! பிக்பாஸில் இருந்து விலகினார் கமல் - கனத்த மனதுடன் விலகுவதாக உருக்கம்

Read more Photos on
click me!

Recommended Stories